பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வள்ளுவரும் குறளும்

தந்தை முன்னே கொண்டுவந்து வைத்து வீர வணக்கம் வணங்கினான். எவ்வளவு பெரிய வெற்றி? எண்ணத் திலே! துணிவிலே குறியிலே! ஆற்றலிலே! அத்தனையும் வெற்றி! பார்த்தான் வேடர் தலைவன். எழுந்து வாழ்த் தினானா? இல்லை; திரும்பிப் படுத்துக் கொண்டான். இளைய மகன் யானை வேட்டைக்குப் போக எண்ணி, யானை எய்யும் வேலைக் கையில் தாங்கி, யானை வாழும் காட்டுக்குச் சென்று, யானையையுங் கண்டு, குறிபார்த்து வேலை வீசி எறிந்து, குறி தவறி யானையும் பிழைத் தோடிப் போய், வேலையும் இழந்து விட்டு, வெறுங் கை யோடு தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தந்தை முன்னே வந்து வணங்கினான். வேடர் தலைவன் எழுந்து அவனை இறுகக்கட்டி தோன் வீரன் என்று வாழ்த்தி னான். எவ்வளவு உயர்ந்த கருத்து? பாருங்கள்!' என்ன ஐயா! எங்கே இருக்கிறது இந்தக் கதை. திருக்குறளிலே? திருக்குறளிலே கதை ஏது?' என்றா கேட்கிறீர்கள்? ஒரு குறளிலே இவ்வளவு நீளமான கதை இருக்கிறது. குறள் வேண்டுமா? -

"கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.”

அம்பைப்பற்றிச் சொல்லும் பொழுது முயல் எய்த அம்பு! வேலைப்பற்றி சொல்லும் பொழுது யானை பிழைத்த வேல்! இந்த அம்பாலே முயலைக் கொன்றேன்; இந்த அம் பாலே முயலைக் கொன்றேன் என்று தூக்கித் திரியாதே! அது உனக்குச் சிறப்பைத் தராது.இந்த வேலுக்கு யானை பிழைத்தோடிப் போயிற்று இந்த வேலுக்கு யானை பிழைத்தோடிப் போயிற்று என்று சொல்லு! அது உனக்குப் பெருமை தரும்! இவை எல்லாம் பதவுரை, பொழிப்புரை. கருத்துரை என்ன தெரியுமா? சிறிய காரியங்களிலே முயன்று வெற்றிபெறுவதைவிடப் பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு: என்பது. இது வள்ளுவர் கருத்து. அமெரிக்கப்