பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 45

பேராசிரியர் என்ன புதுக்கருத்தைக் கண்டுபிடித்து விட் டார். இரண்டு ரூபாய்க்குப் புதுக் கருத்து: 'காண முயலெய்த அன்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது.”! என்ன உயர்வு பாருங்கள்! இத்தகைய உயர்ந்த கருத்துக்களை நாங்கள் குறளிலே பார்க்கலாம்.

இப்பொழுது மின்சாரம் கிடைப்பதில்லை, மில்களி லெல்லாம் வ ா ர த் து க் கு மூன்று நாட்கள்தான் - வேலை நடக்கிறது. முதலாளிகளுக்கும் பொருளாதாரம் வருமானமில்லை. தொழிலாளிகளுக் கும் வருமானமில்லை. இதற்கு என்ன வழியென்று குறளைப் புரட்டுங்கள். சங்கதி இருக்கிறது இதில் பொருளாதாரம் எப்படி? பெரிய பொருளாதார நிபுணர் வள்ளுவர். எந்தத் துறையிற் பார்த்தாலும் அந்தத் துறையிலே துறைபோக அறிந்தவர் வள்ளுவர். உலகிலே வள்ளுவர் ஒரு தனிமனிதர். பொருளாதாரத் திற்கு என்ன வழி? குறளைப் புரட்டுங்கள். சொல்லு கிறார். என்ன சொல்லுகிறார்? வருமானம் குறைந்து போய் விட்டதா? கவலைப்படாதே என்கிறார். அவர் கொடுக்கிற ஊன்றுகோல் என்ன தெரியுமா? வருமானம் குறைந்து போனால் செலவு இனத்தை சுருக்கிக் கொள் என்பதுதான்.

'ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.'

வருமானம் குறைந்து போனாலும் கவலைப்படாதே; செலவினங்கள் விரியாமலிருந்தால் போதும். குளத்தின் வரத்துக் கால் அடைபட்டுப் போனாலும் பரவாயில்லை;

வடிகாலை மட்டும் திறந்துவிடாதே.

வறுமை வந்துவிட்டால் கலங்காதே! போய்ப் பார் - ஒவ்வொருவரையும். வறுமை வந்தால் வறுமை தான் சுற்றத்தார்களை யெல்லாம் அளந்து பார்க்கிற ஒரு அளவுக்கோல்

கிடைக்கும்!