பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 金7

சேர்த்துக்கொண்டு, இங்கே நாடு பாழாகிறது. அமெரிக்காவில் என்ன வளர்கிறது? சீட்டுக் கப்பல்களை இரண்டு, இரண்டு ஆக அனுப்பிவிட்டு, அட்டைக்கூழ் காய்ச்சிகிற கம்பெனி, சாயம் காய்ச்சுகிற கம்பெனி, அச்சு அடிக்கிற கம்பெனி, கப்பல் கட்டுகிற கம்பெனி எல்லாம் வளர்கின்றன! அங்கிருந்து யாவும் ஒழுங்காய் வந்து இறங்குகின்றன. நமக்கும் அமெரிக்காவுக்கும் நிரம்ப ஒற்றுமை. அவர்கள் இரண்டு இரண்டு கப்பல் சீட்டுக் கட்டுகளை அனுப்பிக்கொண்ட்ே இருக்கவேண்டி யது. இங்கே அவைகளைக் கொண்டு விளையாடி நாட்டுத்தொழில் எல்லாம் பாழாக வேண்டியது. இங்கே நடக்கிறது. அப்படி! இதைப்பற்றி வள்ளுவரைப் பேய்க் கேட்டால் 'சூதாடாதே’ என்கிறார். அதற்கு ஒரு குறள் கூறுகிறார்.

'ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாம்கெல் நன்றெ ய்திவாழ்வ தோர் ஆறு'

என்று, இதற்குப் பரிமேலழகர் ஒர் உரை எழுதியிருக் கிறார் அவருக்குத் தெரிந்தவரையிலும் எழுதியிருக் கிறார். அவ்வளவுதானே! அந்த உரை தவறு. வள்ளுவர் கருத்து அதுவல்ல. ஆனால் இருக்கின்ற உரைகளிலே பரி மேலழகர் உரைதான் பெரும்பாலும் நல்ல உரை. அதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஆனால் அந்த நல்ல உரையிலும் பல குறள்களுக்குத் தவறான கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார், அதுவும் சொல்லித்தானே தீர வேண்டும். தவறான கருத்து அதிலே இந்தக் கருத்தும் ஒரு தவறான கருத்து. அவர் சொல்கிறார் சூதாடுகிற வனிடத்தில் போய்ச் சூதாடாதே என்று ஏன் சொன்னார் சூதாடுகிறவன் இன்றைக்கு ஒரு ரூபாய் ஜெயிப்பானாம் அந்த ஆசையாலே நாளைக்கு நூறுரூபாய்களைத் தோற்று விடுவானாம். ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்'