பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வள்ளுவரும் குறளும்

என்று சொல்லுகிறார். இது சரிதான். ஒர் அளவுவரை மேற் போக்காகப் பார்த்தால். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் தப்பு என்று படுகிறது. இப்பொழுது நானும் நமது தலைவரும் சீட்டு ஆடுகிறோம் என்று வையுங்கள். நான் இன்றைக்கு ஒரு ரூபாய் ஜெயித்து, 'நாளைக்கு நூறு ரூபாய் தோற்றுவிடுகிறேன். எனக்குப் பொருந்து கிறது கருத்து. அவர் ஒரு ரூபாய் தோற்று நூறு ரூபாய் ஜெயித்தவராகி விட்டரோ, அவருக்கு எப்படிப் பொருந்தும் இந்தக் குறள்? வள்ளுவர் அவ்வளவு மோச மான ஆளா? ஒருதலைச் சார்பாக இருக்காதே அவர் நீதி எனக்கும் அவருக்கும் பொருந்துகிற மாதிரியல்லவா ஒரு பொருள் இருக்க வேண்டும். அதில் பரிமேலழகர் பொருளைக் கொண்டால் ஒரு ரூபாயை ஜெயித்து நூறு ரூபாயைத் தோற்கிறவனுக்கு ம ட் டு ம் சொல்லி யிருக்கிறதே தவிர, அவனோடு விளையாடி ஒரு ரூபாயை தோற்றுவிட்டு நூறு ரூபாயை ஜெயிக் கிறவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை யென்றே கொள்ள வேண்டியிருக்கும். அப்போது உண்மையான பொருள் என்ன? என்று துருவிப் பார்த்தால் அறிவுக்குத் தீனி கிடைக்கிறது. என்ன தீனி? பணத்தின் எண்ணிக் கையிலே போய் விட்டார் பரிமேலகழர். அவ்வளவுதான் வள்ளுவர் பணத்தின் மேற் போகவில்லை.

சூதாடிப் பயல் நூறை இழந்துவிடுவானாம் நூறு என்றால் ரூபாயல்ல; மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி,

எல்லாம் தாளாண்மை, இன்பம், பெற்றோர் இழக்கும்.சூதாடி உற்றார், உறவினார், நண்பர், நாட் டார் ஆடு, மாடு, வண்டி, வாகனம், நீர், நிலம், பொன், பொருள், போகம், ஆடை, அணி அத்தனையும் இழந்து விடுவானாம் குத்தாடி, எல்லாவற்றையும் இழந்துவிட்டு, ஒன்றே ஒன்றைமட்டும் பெறுவானாம். என்ன அது: 'சூதாடிப் பயல்' என்ற