பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 51

எரிகிற தீவட்டி தண்ணிரிலே நுழையப் போகும்போதே 'சொய்' என்று அணைந்து போகுமாம். குடிகாரனுக்குச் சொல்லுகிற புத்தியும் அப்படியே. காதிலே சொய்' என்று அணைந்து போகுமாம்; உள்ளே போகாதாம். அங்கே கற்பனை வேறு ஒர் அழகு (சிரிப்பு) நான் சொல்ல மாட்டேன் என்கிறார். ஐயா! இப்படிச் சொல்லிவிட்டுப் போகலாமா? ஏதாகிலும் சொல்லுங்கள் என்று ஒருவன் கேட்கிறான். வள்ளுவர் அவனை விட்டுவிட்டு நம்மைக் கேட்கிறார். இ ந் த க் கு டி கா ர ன் குடிப்பான் அல்லவா? குடிப்பான். என்றைக்காவது ஒரு ந | ள் குடிக்காமல் இ ரு ப் ப ான ல் ல வ ? இருப்பான். அப்போது, குடித்த ஒருவனைப் பார்க்க மாட் டானா? பார்ப்பான்! ஏன், பாதையில் அவன் கால் மாறி மாறி மாறுநடை போடுகிறது? நடை போடுகிற அழகு. அவன் வாயில் ஊறி நெஞ்சில் வழிகிற எச்சில், போகிற போக்கு! ஏய் யார்ரா அவன் என்னைப் பார்க் காமல் போர்ர வன்?' என்று அவன் பேசுகி ற பேச்சு! வாய் குழறுதல்! இக் காட்சிகளைப் பார்க்க மாட்டனா? பார்ப் பான். பார்த்தால் குடிக்கமாட்டானே' என்று சொல்லு கிறார். குடிக்கிற ஒருவன்? குடியாதபோது குடித்தவனைப் பார்த்தால் நாமும் குடித்திருக்கிறபோது இப்படித் தானே பிறரால் இகழப்படுவோம் என்று எண்ணுவானே! எண்ணியபின் குடிக்க மாட்டானே? என்று நம்மைக் கேட்கிறார்.

"கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு:

என்ன கேள்வி பாருங்கள்! கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான் கொல், நினைக்க மாட்டானோ, உண்டதன் சோர்வு: "நாமும் குடித்தால் இப்படித்தானே சீரழிவோம் மக்கள் முன்னே! என்று எண்ணமாட்டானா? எண்ணுவான்! எண்ணினால் குடிக்க மாட்டானே!' என்கிறார்.