பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வள்ளுவரும் குறளும்

பெற்ற தாயையும், சான்றோரையும் கொண்டுவந்து நம்முன்னே நிறுத்துகிறார் வள்ளுவர் இரண்டு பேருக்கும் இலக்கணம் சொல்லுகிறார். பெற்ற தாயும் சான்றோரும் தாய் என்ன குற்றம் செய்தாலும் பொறுப்பாளாம். சான்றோர் ஒரு சிறு குற்றம் செய்தாலும் பொறுக்க மாட்டார்களாம். இது இருவருக்கும் இலக்கணம். அம்மா! உன் மகன் சூதாடிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் போய்ச் சொல்வானாம். போடா! ஆடமாட்டானே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான் என்பாளாம் அந்தத் தாய் உள்ளத்தை அப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறார். அம்மா! உன் மகன் திருடிவிட்டான் என்று போலீஸ் காரன் பிடித்துக்கொண்டு போகிறான் என்று ஒருவன் .ெ சா ல் லு வ ன ம். ஐயோ! என் மகன் திருட மாட்டானே; எந்தத் திருட்டுப்பய பிள்ளையோ என் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு போயிருக்கும்' என்று ஒடுவாளாம். எந்தத் திருட்டுப்பய பிள்ளையோ இவள் பிள்ளையை கூட்டிக்கொண்டு போய்விட்டதாம். திருட மாட்டானே என்று ஒடுவாள். சூதாடப் பணம் கேட் பானாம். ஏண்டா கெட்டுப்போகிறே!' என்று கூறிப் பணமும் கொடுப்பாளாம் (சிரிப்பு). என்றைக்காவது ஒரு நாள் திருந்திவிடுவான் என்கிற அந்த ஆசை பத்துத் தடவை கொடுப்பாளாம். பதினோராவது தடவை இல்லையென்று கூறிக் கடன் வாங்கிக் கொடுப்பாளாம், பன்னிரண்டாம் தடவை கேட்பானாம்-இல்லை' யென்பாளாம்-ஓங்கி அறைவானாம்-அறைந்தவுடனே இரண்டு பற்கள் விழுமாம். இரத்தம் கொட்டுமாம்? 'அடே பாவிப் பயலே! ஏண்டா அடிக்கிறே?' என்னுமாம் அவள் வாய். அவள் உள்ளம் என்ன நினைக்குமாம்? நான் பெற்ற பிள்ளைக்கு எவ்வளவு வலுவு இருக்கிறது? அடித்தா பல் விழுகிறதே என்று மகிழுமாம் (சிரிப்பு) இவ்வளவு வலுவு இருக்கிறதே? அடியே காமாட்சி! கமலம், இங்கே. வா என் பிள்ளை சாண் இருந்தான், முழம் இருந்தான்.