பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வள்ளுவரும் குறளும்.

வியாபாரிகள் சிலரிருக்கிறார்களென்று தெரிகிறது. அவர்களுக்கு ஏதாவது சொல்லவேண்டாமா? எங்கள் ஊரிலே சுப்பிரமணிய செட்டியார் வாணிகர்கள் என்று ஒருவர் இருந்தார். அவரிடம் 'குறளைப் படியுங்கள்' என்றேன்... "என்னத்துக்காக படிக்கணும்?'-ஐயா! நான் படிக் கிறேன்"-"நீங்கள் எங்கேயாவது பேசுகிறதற்குப் படிப் பீர்கள். நான் என்னத்துக்காகப் படிக்கவேண்டும்' என்றார் போ, ஐயா என்றேன்-இப்போது 20 நாட்களுக்கு முன்பு வந்து, 'என்னாங்க அன்றைக்கு என்னமோ ஒரு நூலைப் படிக்க வேண்டுமென்று சொன் னிர்களே, என்ன பேருங்க? என்ன விலை? எங்கே விற்கும்? என்றார் போய்யா, நீதான் வியாபாரியாச்சே, உனக்கு வேண்டியதில்லையே' என்றேன். உங்களுக்குச் சங்கதி தெரியாதுங்களா, இப்பத்தான் நான் கடையை எடுத் திட்டேனே' என்றார் (சிரிப்பு). அவர் கருத்து, 'கடையிருந்தால் குறள் படிக்க முடியாது’ என்பது போலும்! 'ஏன் கடையை எடுத்து விட்டீர்கள்? என்றேன்-'உங்களுக்குச் ச ங் க தி தெரியாதுங்களா. எங்கள் அக்காள் மகன் ஒரு பையன் இருந்தான். இருபதி, னாயிரம் ரூபாய் மூலதனம் வைத்துக் கடை வைத்துக் கொடுத்தேன், அவனுக்காக. இந்தப் போக்கிரிப் பயல் பாருங்கள் பதினாலாயிரம் ரூபாய் மோசம் பண்ணி விட்டான். ஆறாயிரம் ரூபாய்தான் மீதமிருந்தது, கண்டு பிடித்தேன். உடனே அவ்னை நிறுத்திவிட்டேன். இந்த ஆறாயிரம் ரூபாய் வியாபாரத்திற்கு இன்னொரு ஆளை நம்பிக்கையுள்ளவனென்று தேடிப் பிடித்து அவனைக் கொண்டுவந்து வைத்தேன். அப்புறம் எனக்கு இரவிலே தூக்கம் வருகிறதில்லை. அந்த முதற் பயல் மாதிரி, அயோக்கியப் பயலாய் இந்தப் பயலும் மாறி, ஆறாயிரத் தையும் சாப்பிட்டு விட்டுப் போய்விடுவானோ என்கிற சந்தேகம் எனக்கு வந்து கொண்டே இருந்தது. அவன் யோக்கியன்தான் என்றாலும், இதற்காக அவனை அடிக்