பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை சித்தாந்த கலாநிதி தமிழ்ப்பேரசிரியர் -தியாகராயர் கல்லுரி, மதுரை. வித்வான் ஒளவை சு. துரைசாமி அவர்கள்

தமிழ் வாழ்வுக்கு மானம் உயிரினும் சிறந்தது. அந்த மானத்தைத் தமிழர் மொழியிலும் நினை விலும் நின்று நிலவும் அரும்பணியைப் புரிந்தவர் ஆசிரியர் திருவள்ளுவனார். இடைக்காலத்தில் வடமொழியில் மயங்கி, பிற்காலத்தில் ஆங்கிலத் தின் அடிவீழ்ந்து அறிவு அறைபோகிய தமிழ் மக்கட்கு, நெடுநாட்கள் வரை திருவள்ளுவரின் சீரிய அறிவுப்பணி தெரியாதுஇருந்தது. இன்றைய தமிழ்நன்மக்களுக்குத் திருவள்ளுவரது திருக்குறள் பெறலரும் அறிவு ஒழுக்கக் கருவூலமாவது தெரி யத் தொடங்கி விட்டது. எங்கும் யாவரும் திருக் குறளைப்பற்றிப் பேசுகின்றனர்; எவருடைய பேச்சிலும் திருக்குறள் கருத்து ஒளிர்கின்றது. இந்நிலைமை எய்துவதற்கு முயன்று பயன்கண்டு மகிழ்பவருள் நண்பர் கி. ஆ. பெ. விசுவநாதன் முன்னணியில் நிற்கின்றார். அவருடைய பேச்சி லும், எழுத்திலும், திருக்குறளின் சொல்லும் பொருளும் திகழ்வது யாவரும் அறிவர். இனிய மொழிநடையும் இடையிடையே நகைநலமும் கலந்து, தெளிந்த ஆறுபோல் ஒடுவது அவரது சொற்பெருக்கு.