பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 59

காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது நாம் திருக்குறளைப் படிக்க வேண்டும். அவ்வளவுதான். யாருக்கு, என்ன இல்லை திருக்குறளிலே? எல்லாம் இருக்கிறது குறளில்,

அதிலே இல்லாதது ஒன்றுமில்லை. ஒரே மேடையில் அரசியல் தலைவர்களெல்லாம் உட்கார்ந்திருப்பதைப் பார் த் தி ரு ப் பீ ர் க ள். காங்கிரஸ்

ஒற்றுமை கட்சிக்காரர்கள், ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள், திராவிட க் கழகக்காரர்கள். சோஷியலிஸ்ட்காரர்கள், பொதுவுடைமைக்காரர்கள்

எல்லாரும் சில சமயங்களில் ஒன்றாக உட்கார்ந்திருப்பார் கள். எல்லோரும் ஒன்றாகி விட்டார்களென்று நீங்கள் நினைப்பீர்கள். இல்லையென்று சொல்லுகிறார் அவர். பங்காளிகளெல்லாம் சேர்ந்து காது குத்துகிறதற்கு மாமன் மைத்துனன் முன்னாலே ஆண்டவனுக்குப் பூசை போடும் போது எல்லோரும் ஒன்றாக இருப்பார்கள். ஆனால், உள்ளத்தே ஒற்றுமையிராது. வஞ்சினம் குடி கொண்டிருக்கும். இந்தப் பயல்களை நம்பாதே' என் கிறார் வள்ளுவர். எல்லாரும் கூடியிருக்கிறார்களா? ஆமாம் எங்கே கூடியிருக்கிறார்கள்? இ ல் ைல யே என்கிறார்-என்ன ய்யா இவ்வளவு பேர் ஒன்றாகக் கூடியிருக்கிறார்களே என்றால், எனக்குச் சொன்னால் தெரியாது என்று குயவனிடத்திலே போய் ஒரு பானையை யும் ஒரு மூடியையும் எடுத்துக் கொண்டு வந்து அதன்மேல் மூடிக் காட்டுகிறார். சேர்ந்து இருக்கிறதா? ஆமாம், எங்கே சேர்ந்திருக்கிறது? என்று பிரித்துக் காட்டுகிறார்.

'செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே

உட்பகை உற்ற குடி' உள்ளத்திலே பகை இருக்கிறது. உதட்டிலே உறவு இருக்கிறது. இரண்டும் சுட்டது. சுட்ட சட்டி எப்படி ஒட்டும்; ஈரமண்ணாயிருந்தால்தான் ஒட்டும் 'செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி.'