பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 63

பத்தையும் சொன்னால்தானே குறள் கம்பர் கண்ட முடியும்? அதற்காகச் சொல்லுகிறேன். பெண் கணவன் சோறு .ெ க ா ன் டு வ ர ச் சொல்லி விட்டுப் போய் நிலத்தை உழுகின்றானாம். பஞ்சைவிட மெல்லியதாய் அவன் உழுது விட்டானாம். அவன் மனைவி சோறு கொண்டு போன வள், உழுதுகொண்டு போகிற தன் கணவன் அறியாமல் பஞ்சின் மெல்லடிப்பாவை, பஞ்சைவிட மெல்லிதாக உழுத அந்த மண்ணிலே தான் வருகின்ற ஓசை தெரியாமல் காலை வைத்துப்போய், சோற்றைக் கீழே வைத்து விட்டு, அவன் கண்ணைப் பொத்தி னாளாம், அவன் ஏரை வி ட் டு வி ட் டு, 'யார்? என்றானாம். இவள் கண்ணை விட்டு விட்டு அழு கிறாளாம். குய்யோ! முறையோ! என்று. இவ்வளவுதான் பாட்டு: எதற்காக? என்ன செய்தான்? ஏன் அழுகிறாள்? ஏன் கண்ணைப் பொத்தினாய்? என்று திட்டவில்லை. வேலை செய்கிறது தெரியவில்லையா? என்று அடிக் வில்லை. கையை இழுத்து எடுத்துவிடவில்லை. நகம் ஏதும் பட்டுவிடவில்லை. ஒன்றுமே இல்லை. அவன் கேட்டதெல்

லாம், யார்?' என்பதுதான். அவ்வளவுதான்! அவள் அழுகிறாள்! பாட்டு வேண்டுமா? "யாரென்னலோடும் அனலென்ன உயிர்த்தழுதாள். 'யார்' என்றானாம்.

அனல் மாதிரிக் கண்ணி உகுத்து அழுது அலறுகிறாளாம், என்ன கருத்து. "ஐயோ பாவி! நீ வீட்டிலிருந்து இங்கே வந்து நிலம் உழுகிறாய் என்றல்லவா நான், இவ்வளவு நாட்களாய் நினைத்துக்கொண்டிருந்தேன். கண்ணைப் பொத்தினவுடனே மனைவிதான் கண்களைப் பொத்த உரிமையுடையவளென்று நினைத்து, ஏண்டி கமலம்' என்று என் பெயரைச் சொல்லிக் கையை எடு' என்று ஏன் சொல்லவில்லை? யார்’ என்று கேட்கக் காரணம் என்ன? இங்கே பல பெண்கள் வந்து உன் கண்னைப் பொத்துள்ர்கள் போலிருக்கிறது (சிரிப்பு) நீ யார்? யார்! யார்? என்பாய் போலிருக்கிறது. அவள் ஒவ்