பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வள்ளுவரும் குறளும்

வொருத்தியும் மீனாட்சி, காமாட்சி யென்பாள் போலிருக் கிறது. அப்படியென்றால் கண்ணைவிடு, அப்படி யென்றால் கண்ணைவிடு என்று சொல்லிக் கொண்டி ருப்பாய் போலிருக்கிறது. இந்தத் திருவிளையாடல் இங்கு நடைபெறுகிறதோ? ஐயோ! ஐ யோ !! என்று அழுகிறாயாம் (சிரிப்பு). இப்படிப்பட்ட பெண்ணும், அப்படிப்பட்ட ஆணும் கூடி வாழுகிற நாடு அயோத்தி என்று அந்த நாட்டுச் சிறப்பிலே சொல்லிக் கொண்டு போகிறார் கம்பர்.

ஆனால், வள்ளுவர் கண்ட பெண் இருக்கிறாளே அவள் ஒரு படி உயர்வு. நான் அரசனுடைய காரண மாகத் துரது போய்விட்டு வருகிறேன்' வள்ளுவர் என்று புறப்படுகிறான். .ெ ச ன் று கண்ட பெண் விரைவினில் வந்துவிடுகிறேன்' என்று கூறுகிறான். என்னிடம் சொல்லாதே' என்கிறாள்-என்ன? செல்லாமலிருந்தால் என்னிடம் சொல்லு! சென்று விரைவாக வந்துவிடுகிறேன் என்ப தானால், அதைக் கேட்டும் உயிரோடு இருக்கிறவளைப் பார்த்துச் சொல்லு!' என்றாளாம்.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுகின் வல்வரவு வாழ்வார்க்கு உரை.

'நான் சென்று திரும்பி வருகின்றேன் என்பாயானால், அச்சொல்லைக் கேட்டதும் என் உயிர் போய்விடும். நீ போகாமலிருக்கிறதாயிருந்தால் சொல்லு, என் உயிரும் போகாமலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும்' என்றா ளாம் எவ்வாறோ ஆறுதல் கூறி, சென்று, திரும்பி வந்து விட்டான். வந்த பிறகு இவள் பேசவில்லை, ஏன் பேச வில்லை என்றான். அ ப் போதும் பேசவில்லை. 'பெண்ண்ே சென்றிருந்த வேலை மன்னனுடையது. என்றாலும் நான் உன்னையே நினைத்துக் கொண்டிருந் தேன். என்கூட ஏன் பேச வி ல் ைல?" என்றான்.