பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் குறளும் - Ꮾ Ꮌ

அதற்கவள், 'என்னையா நினைத்துக் கொண்டிருந் தீர்கள்?' என்றாள். ஆம்' என்றான். ஐயோ ஐயோ! வென்று அழுகிறாள். என்னையேதானா நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டு, அவன் ஆம் என்றதும் ஐயோ! ஐயோ! ! என்று அழுகிறாள் ஏன்? சும்மா நான் பேசுவதை நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி? கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்கள். என்னவா யிருக்கும்? இவள் கருத்து என்ன? ஏன் என்னை நினைத் தாய்? அதற்கு முன்னே என்னை மறந்திருக்க வேண்டமே. மறந்திருந்தால்தானே நினைப்பு வரும்? மறந்துவிடுவது, பிறகு என்னை நினைத்துக்கொள்வது அப்படித்தானே? ' என்று கேட்டுக் கண்கலங்குகிறாள்.

'உள்ளினேன் என்றேன்மற் றேன்மறந்தீர் புல்லாள் புலத்தக் கனள்' (என்றென்னைப் என்பதே அக் குறள். என்ன உயர்ந்த பண்பு பாருங்கள்! அப்புறம் அவன் ஆண்பிள்ளையல்லவா? சரி பெண்ணே! நான் ஒன்றுதான் இனிமேல் சொல்லுவேன்-என்ன சொல்லுகிறாய்; இந்த உயிர் சுடுகாட்டிற்குப் போகிற வரைக்கும் உன்னைவிட்டு இனிப் பிரியமாட்டேன். நீ நம்பு என்னை' என்றான். அப்படியா என்றாள். ஆம்' என்றான் ஐயோ! ஐயோ என்று அழுகிறாள். அந்தக் குறள்கூட இதுதான் பாருங்கள்.

"இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள்' இந்தப் பிறவியிலே நான் உன்னைவிட்டுப் பிரிவதில்லை யென்றுசொன்னான். சொன்னவுடனே அவள் அழுகிறாள், ஏன் அழுகிறாள்? அப்படியானால் என்னை அடுத்த பிறவி யிலே கைவிட்டு விடுவாய் போலும்! என்று சொல்லி அழுகிறாளாம். அவர்கள் வாழ்வு எவ்வளவு உயர்ந்தது பாருங்கள்! - . . o

வ. -5