பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

உலகியல் வாழ்வுக்குத் திருக்குறளறிவு இன்றியாமையாதது என்பதை, முப்பால்களி லிருந்தும் பல குறட்பாக்களைக் காட்டி, அன்றாட நிகழ்ச்சிகளில் வைத்து விளக்கிச் செல்வது இந்நூலின்கண் மிக்க அழகுசெய்கிறது. இவரது இச்சொற்பொழிவு பொதுமக்களைத் திருக்குறள் படிக்கத் துண்டும் செங்கோலாக இருக்கிறது. அதிகாரங்களை மனப்பாடம் செய் தற்குச் சொற்பொழிவாளர் காட்டும் புதுநெறி, யாவரும் விரும்பி வரவேற்பதொன்று. பால் போன்ற உள்ளமும். பண்பட்ட அறிவும், பரந்த தமிழன்புமுடைய திரு கி ஆ பெ அவர்களின் இத் தொண்டு மிகச் சிறந்ததொன்று. மிகவும் பயன் படுவதான இச் சொற்பொழிவை ஒலிப்பதிவு செய்து, பின்பு அச்சிட்டு வெளியிடும் கோவைத் திருவள்ளுவர் படிப்பகத்தின் முயற்சி பெரிதும் பாராட்டற் குரியது. -

வாழ்க கி. ஆ. பெ.! வளர்க திருக்குறட்பணி! வளம் பெறுக, கோவை வள்ளுவர் படிப்பகம்!

மதுரை, } அன்புள்ள, 15-10-53 ஒளவை துரைசாமி