பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வள்ளுவரும் குறளும்

கிறேன், மனம் கொதித்து. எங்கள் எங்கள் குடும்பம் மிகவும் பெரியது திருச்சி குடும்பம் ராப்பள்ளியிலே, சென்னை மாகாணத் திலேயே பெரிய குடும்பம் இவ்வளவு பெரிய எண்ணிக்கையுள்ள குடுப்பம் இந்தியாவிலேயே எங்கும் இல்லையென்று சொல்லலாம், ஏழெட்டுப் பேர் வெளிநாட்டுக்காரர்கள்கூட எழுதிவைத்துப் போயிருக் கிறார்கள். கதை அதிகமாய்ச் சொல்லக்கூடாது. எங்கள் அப்பாவுக்குப் பதினாறு பிள்ளைகள். நான்தான் பதினா றாவது ஆள் (சிரிப்பு) எனக்குப் பதினான்கு குழந்தைகள் (சிரிப்பு) எனக்கு அண்ணா எட்டுப் பேர். அக்காள் ஏழு பேர். ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் நிறைய இருக் கின்றன எங்கள் அண்ணன் ஒருவருக்குப் பதின்மூன்று குழந்தைகள். கதை வேண்டாம். எங்கள் நகராட்சி யிலே எங்கள் பிரிவிலே அதிக வாக்குரிமைகள் எங்கள் இல்லிற்குள்ளேயே இருக்கின்றன. இது ஒன்றும் பொய் யல்ல. அவ்வளவு பெரிய குடும்பம். இதிலே ஐந்து தலை முறைக் கதை சொல்லுகிறேன் பாருங்கள்.

எங்கள் பாட்டி உலக்கை எடுத்து ஒரு கலம் நெல் குத்துவாள்; தனியாக! எங்கள் ஐயா காலையில் இட்டிவி சாப்பிடுவிட்டுக் கடைக்குப் போய்

காலக் விட்டுத் திரும்பி வருகிறதற்குள்ளே கொடுமையா? குத்தி வைத்து விடுவார்கள். மத்தி - யானம் போனவுடனே பு ைட த் து எடுத்து ஒரு ரூபாய் கூலிவாங்கி விடுவார்கள். எங்கள் பாட்டியிடம் நான் மிரட்டிக் காசு வாங்குவேன். பாட்டி காசு இல்லையென்றால், அப்பாவிடம் சொல்லிவிடுவேன் நீ நெல்லுக் குத்துகிறாயென்று என ஏமாற்றிக் காசு வாங்கின ஆள் நான் ஒரு மூட்டை நெல்லை எங்கள் பாட்டி குத்தி விடுவார்கள், எங்கள் அம்மாவால் முடிய வில்லை. அடுத்த தலைமுறை; நெல்லுக் குத்த முடியாது அவர்களால். அவர்கள் உட்கார்ந்து கொண்டு காலை