பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 71

நீட்டிக்கொண்டே எங்க வீட்டு இட்டிலிக்கு அரிசி மாவும், உளுந்துமாவும் ஆட்டி விடுவார்கள். அடுத்த தலைமுறை எங்கள் அக்காளாலே முடியவே முடியாது. நின்றுகொண்டே அம்மியைப் பிடித்து இரண்டு, மூன்று தடவை அரைப்படி மிளகாயை அப்படியே அரைத்து விடுவார்கள். அடுத்த தலைமுறை என் மனைவி நெல்லுக் குத்த, மாவாட்ட முடியாது இதற்கெல்லாம் ஆள் வைத்தாக வேண்டும். ஊதாங்குழலை எடுத்துக் கொண்டு, அடுப்பு அருகில் போய், பூ பூ! வென்று ஊதி (சிரிப்பு) சமைத்து வைத்துவிட்டுப் பேசாமலிருக்கிறது, அவ்வளவு தான். இப்போது என் மகள் இதுவுமில்லை; சமையல் கூடச் செய்யாமல் நூலை எடுத்துப் பின்னிக்கொண்டு, கழுத்தை ஆட்டி நெட்டி எடுத்துக்கொண்டே இருக் கிறது (சிரிப்பு). இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரி கிறது? எங்கள் .ாட்டி உலக்கையைத் தூக்கிக் காலம் தள்ளினாள். எங்கள் அம்மா, ஆட்டுக்கல் குழுவியைத் தூக்கிக் காலம் தள்ளினாள். என் அக்காள் அம்மிக்கல் குழவியைத் தூக்கிக் காலம் தள்ளினாள். என் மனைவி ஊகாங்குழலைத் தூக்கிக் காலம் தள்ளினாள். என் மகள் ஊசியைத் தூக்கிக் காலம் தள்ளுகிறாள் (சிரிப்பு). என் பேத்தி எதைத் துக்கிக் காலம் தள்ளப்போகிறாளோ? தெரியவில்லை (சிரிப்பு). -

வீ ர ர் க ைள ப் பெற்றுக்கொடுக்கின்ற தாய்மார் கள் இருக்கின்ற நிலை இது. எவ்வளவு பெரிய விபத்து - தமிழ் நா ட் ைட க் கல்விக்கொண் தாய்க்குலம் டிருக்கிறதென்று தமிழகத்துத் தலைவர் கள் இன்றைக்கே எண்ணவேண்டும். எண்ணி, இதனுடைய கீழ் நிலைக்கு எது, எது காரணம்? எனக் கண்டுபிடித்து, அத் தவறுகளைத் திருத்தியாக வேண்டும். பாழ்பட்டுப் போகிற பாதையை அடைத் தாகவேண்டும் இல்லையானால் தமிழகத்திலே நாட்டைக் காப்பாற்றுகின்ற வீரர்காளைகள் தோன்ற முடியாது,