பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வள்ளுவரும் குறளும்

நாட்டைப் பாதுகாக்கவும் முடியாது. ஆண்களே! உங்களுக்காகத்தான் சொல்லுகிறேன்; தாய்மார்களைப் போற்றுங்கள் தாயில்லையானால் தமக்கை. தங்கை கைகளைப் பாதுகாவுங்கள். மனைவிகளைப் பாதுகாவுங் கள். பிள்ளைகளைப் பாதுகாவுங்கள் இது உங்களுடைய நீங்காத கடமை. தாய்க்குலம் அது! பல குடும்பங்களில் ஆண் பிள்ளை சோறு சாப்பிடாமல் இருந்தால் பெண் பிள்ளை சாப்பிடுகிறதில்லை. அது வேறு இருக்கிறது. ஒருவன் ஐந்து மணிக்கு வருவான்; அதுவரைக்கும் அவன் மனைவி சாப்பிடமாட்டாள். இதை ஒரு அம்மாளிடம் கேட்டேன். எங்கள் வீட்டுக்காரருக்கு நான் சாப்பிட்டு: விட்டுச் சோற்றைப் போட்டால் அடியில் உள்ள சோற்றில் கல்விருக்கும். அவர் சண்டைக்கு வருவார்' அவருக்கு ஒத்துக் கொள்ளாது. அதற்காக மேல்சோற்றை அவருக்குப் போட்டுவிட்டு, அடிச்சோற்றை நான் தின்கிறது என்றார்கள். அதுவும் ஒரு காரணம். ஏனென்றால், ஆண் பிள்ளைக்கு இந்தக் கல்லுச் சோறு, உதவாது. பிள்ளை பெறுகிற வயிறு பாருங்கள்; பெண் களுக்கு ஒத்துக்கொள்ளுமா? (சிரிப்பு). இவைகளை யெல்லாம் எண்ணிப் பார்த்தாக வேண்டும். - வள்ளுவர் பெண்மையை எவ்வளவு சிறப்பாகக் கண்டு அந்தக்குலம் வளரவேண்டும் என்று சொல்லுகிறார். கற்பைப் பற்றிச் சொல்ல வரும்போது

கற்பு உ ல க த் தி .ே ல யே பெருமையுடையது

ஒன்றுதான் என்று சொன்னார்-எது? -பெண்- பெண்ணில் பெருந்தக்க யாவுள? ஒரே

கேள்வி பெண்ணைவிடப் பெருமையுடையது இந்த உலகத்திலே எது? என்று கேட்கிறார் எப்போது?

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.' ஒரே அடி அடித்தார்; பெண்ணுக்கு மட்டுமா கற்புச் சொன்னார். ஆணுக்கு? டேய்! பெருமை உனக்கு எப்.