பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வள்ளுவரும் குறளும்

காட்டினான். எல்லாம் பார்த்தார். பாவம் அவனுக்கு ஒரு கற்புடைய மனைவி வாய்க்கவில்லை. அதை வள்ளுவர் கண்டுவிட்டார். இங்கே பாருங்கள், எனக்கு எல்லா மிருக் கிறது என்றவனை நோக்கி, பாவிப் பயலே உனக்கு என்னடா இருக்கிறது?’ என்று கேட்டுவிட்டுப் போய் விட்டார். இந்தக் கேள்வியைப் பாருங்கள். நான்கு சொற்கள்; அவனிடம், இ ல் ல .ெ த ன்' என்றார்; இவனிடம் உள்ளதென்?' என்றார்.

'இல்லதென் இல்லவள் மாண்பானால், உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை."

இதென்ன கற்பனையா? உண்மையும் கூடப் பாருங்கள். நல்ல மனைவி வாய்க்கப் பெறாதவன் பன்னிரண்டு அடுக்கு மாளிகையிலே இருந்தாலும் இரும்புப் பெட்டி யிலே ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடுக்கி இருந்தாலும் அவன் என்ன பண்ணுவான். நெறி தவறிய மனைவி பால் கொடுத்தாலும் கூட விஷம் கொடுத்திருப்பாளோ என்று ஐயப்பட்டுக் குடிக்கக்கூட மாட்டானே! அவனுக்கு ஏது நவம்? ஏது வாழ்வு? அவனுக்கு என்னதான் இருக்கும்? இருந்தும் என்ன பயன்? கற்புடைய மனைவி வாய்க்கப் பெறவில்லையானால், அந்தச் சொல்லுக்கு அவ்வளவு பொருள் உண்டு உள்ளதென்? இங்கே! 'இல்லதென்? அங்கே! நான்கு சொற்களிலே இவ்வளவு பெரிய கருத்தை வைத்துச் சொல்வது குறளுக்குள்ள ஒரு தனிப் பெருஞ் சிறப்பு: அதனால்தான் அதற்குச் சிறப்புக் கூற வந்த புலவர் கடலைக் கடுகிலே புகட்டிய மாதிரி இருக்கிறது' என்று கூறினார் போலும்!

பணக்காரனுக்குச் செல்வம் எப்படி வரும் எப்படிப் போகும்? என்று உங்களை ஒரு கேள்வி கேட்டுவிட்டுப் - • . போனால், பத்தாண்டானாலும் நீங்கள் செல்வம் பதில் எழுத முடியாது வள்ளுவர் - சொல்லுகிறார், ப ன க் கா ர னு க் கு