பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 79

காதது மாதிரித் தெரிகிறான்' என்பார். 41 கல்லாமை; 42 கேள்வி) இவன் என்னாங்க என்பான்-நீ போப்பா நாங்கள் திருக்குறள் படிக்கிறோம் என்று அனுப்பிவிடுவது அவனை-ஏனைய்யா, உனக்கும் அருணாசலத்திற்கும் இப்ப 79 இல்லை. என்ன 79 இல்லை? நீங்கள் என்ன கிண்டீர்கள்: 79-ம் அதிகாரம் நட்பு! ஏன் இப்போது நட்பு இல்லை-? அதுங்களா, அவன் திடீரென்று இருந்தாற் போல் இருந்து, 93, 94-க்குப் போய்விட்டான்.' (சிரிப்பு) என்ன 93, 94, 93, குடி 94 சூது (சிரிப்பு) அதனாலே? '82 என்று நினைத்துச் சும்மாயிருந்துவிட்டேன்.' 82 என்ன?-'தீநட்பு' இருந்தாலும் இப்படிச் செய்யலாமா ஐயா-போம் ஐயா? இல்லாவிட்டால் என் 97 போய் விடாதா?’ என்ன் 97? மானம் மானம் போய்விடுமே (சிரிப்பு) அவன் என்ன ஐயா? என்பான். நீங்கள் போங்க, தாங்கள் திருக்குறள் பிடித்துக்கொண்டிருக்கிறோம் என் போம் ஏன் உங்கள் மருமகள 8-ல் எப்படி?” என் மருமகளுக்கு 8 இருந்தால் ஏனையா என் மகனுக்கு 31 வருகிறது?' 8 என்றால் என்ன? அன்புடைமை, மரும்கள் கொண்டுவந்திருக்கிறாயே அன்பiயிருக்கிறாளா?' என் றான்- அவள் அப்படியிருந்தால் என் மகனுக்கு ஏன் கோபம் வருகிறது' என்றான். 31-அதிகாரம் சினம். 'ஏன் உங்கள் பையனுக்கு 6-ஆகிவிட்டதா? என்கிறது. ஆயிற்று' என்றால் என்ன? திருமணம் பண்ணியா யிற்று. 6 ஆயிற்று என்றால் 7-எத்தனை? மக்கட் பேறு 6 ஆனால் 7 எத்தனை? என்று கேட்கவேண்டியது தானே (சிரிப்பு) உலகத்திலேயுள்ள அத்தனையும் பேசித் தீர்த்துவிடலாம் பிறர் அறியாமல். இது குறள் படித்த கூட்டத்துக்கு மட்டும் ஒரு பெரிய மறைமொழியாகவும் இருக்கும்.

எங்கள் வீட்டிற்குத் திருக்குறள் அவதானி வந்திருந்த தார்-சுப்பிரமணிய தாஸ்-உட்கார்ந்து பேசிக்கொண் டிருந்தார் மணி 11-30 ஆயிற்று உயிர் பெறுங்கள் என் மகள் அங்கே யிருந்து வந்தாள். - 'அப்பா ! இ ன் ைற க்கு ஒன்பதா?' என்று கேட்டாள். எனக்கே தூக்கிப் போட்டது. கொஞ்சநேரம் யோசித்து ஆம்ாம்மா' என்றேன். அவள் போய்விட்டாள் இவர் யோசித்தார். என்னடா. ஒன்பதாயென்று கேட்கிறாள் யோசித்து ஆமாம்' என்று சொல்லுகிறார் என்று. உடனே என் மகளை இங்கே வா