பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வள்ளுவர் இல்லம்

‘தக்கார் தகவில ரென்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும்.’ “இவர் நடுவு நிலைமையுடையர், இவர் நடுவு நிலைமையிலர் என்னும் விசேடம், அவரவருடைய நன் மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லை யாதலும் ஒருதலை (நிச்சயம்) ஆகலின் இருதிறத் தாரையும் அறிதற்கு அவை குறியாயின” - என்று

பரிமேலழகர் உரை யெழுதியுள்ளார்.

நேருக்கு நேர் விஞ்ஞான முறையில் இக்குறள் அமைந் திருக்க, ஈண்டுப் பரிமேலழகர் பாவ - புண்ணியங்களைக் குறிப்பாகப் புகுத்தியிருப்பது இரங்கத்தக்கதாகும். அஃதாவது நல்லவர்க்குத்தான் பிள்ளை பிறக்குமாம், கெட்டவர்க்குப் பிள்ளை பிறக்காதாம். எவ்வளவு அறியாமை! (சிரிக்கா தீர்கள்!) இஃது உறுதியாயின், உலகில் ஏறத்தாழ நூற்றுக்குத் தொண்ணுறு வீதத்திற்கு (90%) மேற்பட்டவர் கட்குப் பிள்ளை பிறக்கின்றதைக் காண்கின்றோமே! இவர்கள் எல்லோருமே நல்லவர்கள்தாமா? சிறைக்குச் செல்லும் குற்றவாளிகட்கு மட்டுமே பிள்ளையில்லை போலும் மேலும், திருமணமாகாத துறவிகள், மணமாகியும் குழந்தை பெறாத வர்கள் முதலியோர் கெட்டவர்கள் - இவர்களையும் சிறையில் தள்ளவேண்டும் அல்லவா?

பரிமேலழகர் கூறியிருப்பது இப்பிறவியில் நல்லவராயோ கெட்டவராயோ இருப்பதைப் பற்றி யன்று முன் பிறவியில் நல்லவராயிருந்தவர்க்கு இப்பிறவியில் பிள்ளை பிறக்கும்-முன் பிறவியில் கெட்டவராயிருந்தர்க்கு இப்பிறவியில் பிள்ளை