பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 87

பிறக்காது, என்பதுதான் பரிமேலழகரின் கருத்து என்று சிலர் சப்பைக்கட்டு கட்டிப் பரிமேலழகரைப் பாதுகாக்க விரும்பலாம். இஃது பரிமேலழகரின் கருத்தாயிருக்கலாம்; ஆனால் வள்ளுவர் கருத்தாமோ? “மக்களே, எல்லீரும் உம் வாழ்நாளில் (இப்பிறவியில்) தகுதி-நடுநிலை உடைய வராக வாழவேண்டும். நீங்கள் அப்படி வாழ்ந்தால்தான் உங்கட்குப் பிறக்கும் பிள்ளையும் ஒழுங்காய் இருக்கும். பின்பு பிள்ளையைக் குறை கூறி என்ன பயன்! நீங்கள் தவறி நடந்திருந்தால் உங்கள் பிள்ளையும் தவறி நடப்பான்; அதனால், நீங்கள் நல்லவர்போல் நடித்தாலும், நீங்கள் இருக்கும்போதும் சரி-நீங்கள் இறந்த பின்னும் சரிஉங்கள் மானத்தை வாங்கிவிடுவான்; ஆதலின் மக்களே, எல்லீரும் நேர்மையுடன் வாழ்க!” என்பதே திருவள்ளுவரின் கருத்து. ஒரு பெண் ஒழுங்காகக் குடும்பம் செய்யவில்லை யென்றால் முதலில் பெற்றோருக்குத்தானே வசை!

வாழ்வில் யார்க்கும் இன்ப - துன்பங்கள் மாறி மாறி வருவது என்றும் எங்கும் இயற்கை. ஆதலின் இன்பக் காலத்தில் இறுமாப்புறுதலும் துன்பக் காலத்தில் கலங்கு தலும், மக்களிடம் இன்பக் காலத்தில் ஒருவிதமாக நடந்து கொள்வதும் துன்பக் காலத்தில் ஒருவிதமாக நடந்து கொள்வதும் அறவே கூடா. மனம் என்றும் எங்கும் ஒரே அமைதி நிலையில்-நடுநிலையில் இருக்கவேண்டும். இப் பண்பு சிறந்த அணிகலனாகும்.

உலகில் பலர், தாம் செய்வன தீய காரியங்கள் என்பதைத் தம் மனம் அறியத் தெரிந்துவைத்துக் கொண்டே தன்னலங் கருதிச் செய்கின்றார்கள். அப்படிச்