பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 89

அகராதியில் இல்லையே? அப்படியிருப்பதனால்தான் இவரை நாம் புகழ்கிறோம் என்று புகழ்மாலை சூட்டுவதையும் காண்கிறோமல்லவா? இதைத்தான் வள்ளுவர் சுருக்கி, ‘நேர்மையுள்ளவனுக்கு அந்நேர்மையால் வந்த வறுமையை, உலகத்தார் உண்மையான வறுமையாகக் கொள்ள மாட்டார்கள்’ என்று அறிவித்துப் போந்தார்.

‘கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி”

‘கெடுவல்யான் என்ப தறிகதன் னெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.’ ‘கெடுவாக வையா துலகம் நடுவாக

நன்றிக்கட் டங்கியான் றாழ்வு ‘

துலாக் (நிறை) கோல் தான் சமமாகி, தன்னிடம் வைக்கப்பட்டுள்ள பொருளின் நிறையினையும் தவறின்றி உள்ளபடியறிவிப்பதைப் போல, மக்களும் தாங்கள் தவறின்றி நடந்து, பிறருடைய குற்ற நற்றங்களையும் ஒரவஞ்சனையின்றி உள்ளபடிச் சீர்தூக்கிப் பார்த்து அதற்கு ஏற்றன செய்தல் வேண்டும். அதுதான் அறிவும் அழகும் உடையவர்களின் அறிகுறி.

‘சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ

லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி.”

ஈண்டுத் திருவள்ளுவர், சீர்தூக்கும் கோல் போல்’ என்று மட்டும் சொல்லி விடவில்லை. சமன் செய்து’ என்று முதலில் அதன் ஒழுங்கை வற்புறுத்தியுள்ளதை ஊன்றி நோக்குக! சிலவணிகர்களின் கெடுமதியைத்