பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 91

வெறும் வெளிப் பேச்சைக் கொண்டு அவர்கள் நடு நிலைமையுடையவராக மாட்டார்கள். அவர்களின் மனம் உண்மையாய் வஞ்சனையின்றி இருக்கவேண்டும். உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், உள்ளமும் - பேச்சும் ஒத்தனவாயிருப்பதே நடுநிலைமைக்கு அணி செய்வதாகும்.

“சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின் ‘ வணிகர்கள் (வியாபாரிகள்) பிறருடைய பொருளையும் தம் பொருளைப் போலவே கருதி வாணிகம் செய்தால், அவர்கட்கு நன்றாக வாணிபம் நடைபெறும்.

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவுங் தமபோற் செயின்.’ பிறர் பொருளையும் தம் பொருள் போல் கருதுதல் என்றால் - பிறருடைய உடைமைகளையெல்லாம் தம் சொந்த உடைமையாகக் கருதிப் பறித்துக் கொள்ளுதல் என்பது பொருளன்று. வணிகர்கள் தம் உடைமையை எங்ஙனம் பாதுகாப்பார்களோ, அவ்விதமே பிறர் உடைமை யையும் காத்து அவர்கட்குச் சரியான கணக்கு ஒப்புவிக்க வேண்டும்; தம் உடைமையைத் தாம் இழக்க நேரிடின் தாம் எவ்வாறு வருந்துவார்களோ - அவ்விதமே பிறர் உடைமையைப் பிறர் இழந்தாலும் அவர் வருந்த நேரிடும் என்பதை யுணர்ந்து தாம் அவர் உடைமையில் வஞ்சகம் செய்யாது, நேர்மையில் கண்ணும் கருத்துமாயிருக்க வேண்டும். இதற்குத்தான் பிறவும் தமபோல் பேணிச் செயல் என்று பெயராம். பிறரிடம் தாம் வாங்கும் பொருள்