பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வள்ளுவர் இல்லம்

அளவுக்கு மிகுதியாகவும், பிறருக்குத் தாம் விற்கும் பொருள் அளவுக்குக் குறைவாகவும் இருப்பின் அவரிடம் எவரும் தொடர்ந்து வாணிகம் செய்ய மாட்டாரன்றோ? தம் பொருளும் - பிறர் பொருளும், கொடுக்கலும் - வாங்கலும் நடுநிலைமையுடன் பேணப் பட்டால்தானே அவருடைய வாணிகம் மேன்மேலும் வளர்ச்சியடையும்?

“தமவும் பிறவும் ஒப்ப நாடிக்

கொள்வது உம் மிகை கொளாது

கொடுப்பது உம் குறைபடாது

பல் பண்டம் பகர்ந்து வீசும்.’ என்னும் பட்டினப் பாலை நூலின் அடிகளையும் “பிறர் பொருளும் தம போல் பேணிப் புரிவணிகர்’ என்னும் ‘பிரபுலிங்க லீலை’ப் பகுதியினையும் ஈண்டு ஒத்து நோக்குக.