பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அடக்க முடைமை

எண்ணத்தில் அடக்கமும் (மனம்), பேச்சில் அடக்கமும் (மொழி), செயலில் அடக்கமும் (மெய்) உடையவராய் இருத்தல் வேண்டும். நடுவுநிலைமையைப் போல் இஃதும் இல்வாழ்வார்க்கு இன்றியமையாததன்றோ?

‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்” அடக்கமுடையவர் தெய்வமாகி எல்லோராலும் போற்றப்படுவர். அடக்கமில்லாதவர் தம் அடாத குணத்தால் இருட்டில் ஆழ்ந்து அழிவர். இறவாத நிலையை உடை யவருக்கு அமரர் என்று பெயராம். செத்தவர்களைத் தெய்வம் எனல் வழக்கம். ‘செத்துத் தெய்வமாகப் போய் விட்டார்” என்னும் உலக வழக்கைக் கொண்டு இதனை யோர்க! ஆராயின், அமரர்-தெய்வம் என்னும் இரு சொற் களும் ஒரு பொருளனவே! அப்பொருள்:- பூதவுடம்பை நீத்துப் புகழ் உடம்புடன் உலகில் என்றும் நின்று நிலைத் திருப்பவர்கள் என்பதாம். மன - மொழி - மெய் யடக்கத் துடன் வாழ்ந்து இறந்துபோனவர்களை நாம் தெய்வமாகக் கருதி வழிபடல் இன்றும் வழக்கந்தானே?

மற்று, இருட்டில் உள்ள பொருளை நாம் அறிய முடியாதன்றோ? அதுபோலவே, அடக்கமில்லாதவர் இறந்தபின்பு, அவர்க்குப் புகழுடம்பு இல்லையாதலின் அவரைப்பற்றி யாரும் அறிந்து கொள்ள முடியாது. ஆதலின்