பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வள்ளுவர் இல்லம்

இஃதே உண்மைக் கருத்து! அடங்காமல் ஆரவாரம் செய்தவர்களின் வரலாறுகள் நமக்குத் தெரியுமே! அடக்கத்தைவிட ஆக்கம் வேறில்லை என வெளிப்படையாக வள்ளுவரே இரண்டாவது குறளில் கூறியிருக்கும்போது வேறு பேச்சென்ன அடக்கமே செல்வம் என்பதை அடங் காத செல்வர்களே முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் என்று செல்வர்கட்குச் “சாட்டையடி கொடுக்கிறார் வள்ளுவர் இக்குறளில்! எனவே, மற்றைய செல்வங்களோடு அடக்கமும் ஒரு செல்வம் எனப் பரிமேலழகர் பகர்ந் திருப்பது, பணக்காரர்கட்குப் பரிந்து பேசுவதே யாகு மன்றோ?

ஒருவன் தன் மெய், வாய், கண், முக்கு, செவி என்னும் ஐந்துறுப்புக்களையும் தன் மனம்போன போக்கில் விட்டு, ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐம்புல நுகர்ச்சிகளையும் அளவின்றி நுகர்ந்து அவற்றிற்கு அடிமைப்பட்டானே யானால் விரைவில் கெட்டழிவான்; அவன் தலைமுறையினரும் அவ்விதமே (பரம்பரைப் பழக் கத்தால்) கெடுவர். ஆதலின், அவன் ஆமையானது வேண்டியபோது தன் உடலுறுப்புக்களை நீட்டி இன்புற்றும், வேண்டாதபோது - எதிரி நெருங்கியபோது - உள்ளே யடக்கித் தன்னைக் காத்தும் வாழ்வதுபோல வேண்டிய அளவு ஐம்புல நுகர்ச்சிகளை நுகர்ந்தும், அளவுக்குமேல் மனம் அவாக் கொண்டபோது அவற்றை அடிமைப் படுத்தி அடக்கியும் வாழ்வானேயானால், அவனும் இன்புறுவான்; அவனது (பிரதிநிதிகளாகிய) வழித்தோன்றல்களும் பரம்பரைப் பழக்கத்தால் அவனைப் போலவே புலனடக்கம் உடையவராய் நன்கு வாழ்வர்.