பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வள்ளுவர் இல்லம்

காட்டாகப் பார்க்குமிடத்து:- நிலக்கடலை (மணிலாக் கொட்டை) தின்னும் போது பல நல்ல கடலைகளுக் கிடையில் ஒர் அழுகல் கடலை அகப்பட்டுக் கொண்டாலும் அனைத்துக் கடலைகளும் கெட்டு உமிழப்படுகின்றன வல்லவா! ‘குறுணி பதக்கைக் கெடுத்தது” என்பது பழமொழியன்றோ “இலையில் எல்லாம் பரிமாறி ஓர் ஒரத்தில் எதையோ சிறிது வைத்ததுபோல்” என்று சொல்வது நம் நாட்டில் எளிய வழக்கம். எனவே, சொல்லடக்கமின்றி, பிறர் மனத்தைப் புண்படுத்தும் ஒரு சொல்லையும் சொல்லக்கூடாது.

நெருப்புக் காயம் குறித்த காலத்தில் ஆறிப் போவதை யும், பிறர் திட்டியதால் உண்டான மனத்தாங்கல் அவரைப் பார்க்குந்தோறும், எண்ணுந்தோறும் உறுத்திக்கொண்டே யிருப்பதையும், மற்றும், திட்டியவர் மீண்டும் நண்பராகி விட்டாலும் சில சமயங்களில் பழைய நினைவு வர, முன் இவர் இப்படி திட்டினாரே - என்று மனம் ஏதோ ஒரு வேலை செய்வதையும் நாம் அனுபவ வாயிலாக அறிகிறோம்? ஆதலின் யாரிடமும் சுடுசொல் கூடாது.

நம் உடம்பின் ஒரு பகுதியில் நெருப்புப் பட்டவுடனே நம் மனம் துடிதுடிக்கும்; நாம் படாதபாடு படுவோம்; ஆ’வென்போம் - ஊ வென்போம்; துள்ளுவோம்குதிப்போம். பின்பு நேரம் போகப் போக - நாட்கள் ஆக ஆகப் புண் மட்டும் இருக்கும் - ஆறிக் கொண்டும் வரும்; ஆனால், நெருப்புப் பட்டவுடனே நாம் ஆடிய ஆட்டம், மனத்துடிப்பு முதலியவை இருக்கா. எனவே, உடலில்