பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 101

முழுப் புன்னும் ஆறாமல் வெளியில் தெரிந்து கொண்டிருந்தாலும் நம் மனப்புண் ஆறிவிடும். ஆனால், பிறர் திட்டியதால் உண்டான தாங்கலோ வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளேயே புடை கொண்டு சென்று பச்சைப் புண்ணாகவே இருக்கும். அவர் திட்டியதை எப்பொழுது நினைத்தாலும், முதன் முதல் திட்டியபோது உண்டான வருத்தமும் - ஆற்றாமையும் - சினமும் முளும். திட்டியவரும் திட்டப்பட்ட வரும் கூடிக் கொண்டாலும் கூட, அது - “நெல்லின் உமி (அரிசியை விட்டுச்) சிறிது நீங்கிப் பழமை போல் புல்லினும் திண்மைநிலை போம்’ என்னும் ‘நன்னெறி'யடிக்கு ஏற்பவேயிருக்கும். தீயினால் உண்டாகக் கூடியதை வெறும் ‘புண்” என்றும், நாவினால் உண்டாகக் கூடியதை “வடு’ என்றும் குறள் கூறும். வடு என்பது என்றைக்கும் மறையாமல் தெரிந்து கொண்டேயிருப்பதன்றோ! ‘கல்லடி பட்டாலும் படலாம், சொல்லடிபட முடியாது” என்பது பழமொழியல்லவா?

‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.’

‘ஒன்றானுங் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.” ‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.” ஒருவர் கற்றதோடு விட்டுவிடாமல், சினம் வராமல் காத்து அடங்கி ஒழுகுவாரேயானால், அவர் அறத்தைத்