பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் இல்லம் 102

தேடிச்செல்ல வேண்டியதில்லை; அறமே அவரைத் தேடி வந்து - அடையக்கூடிய பதம் பார்த்து அவரிடம் குடிபுகும். அதாவது, சினத்தைக் காத்தலும் அடங்கி ஒழுகுதலுமே பெரிய அறமாகுமன்றோ! எனவே, அங்ஙனம் ஒழுகுபவர் இயற்கையாகவே பெரிய அறவோராக மதிக்கப்பெறுவார்.

‘கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.'