பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 107

படுதலின் அவர்களே உயிர் வாழ்பவர்கள் என்பது வெளிப் படை. எனவே,

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒமுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.’

பலர் பல தான தருமங்களைப் பற்றியும், சில பயன் உள்ள செயல்களைப் பற்றியும், அவற்றால் உண்டாகக் கூடிய பயன்களைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டு, அவற்றைக் கடைப்பிடித்தும் வரலாம். ஆனால் அவர்களிடம் நல்லொழுக்கம் இல்லாமலும் இருக்கலா மல்லவா? இந்நிலை கூடாது. புகழை விரும்பியும், முத்தியை நம்பியும் பிறர்க்கு வாரி வழங்குபவர்கள் பலர், தம் சொந்த ஒழுக்கத்தில் மிகத் தவறியிருப்பதைக் காண்கின்றோமல்லவா? அவர்களை மனத்தில் வைத்துதான் திருவள்ளுவர் ‘மக்களே! நீங்கள் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பீர்களேயானால், மாட்டையடித்துச் செருப்புத் தானம் செய்வீர்களாயின், தாய் தண்ணீரின்றித் தவிக்கக் கும்பகோணத்தில் கோதானம் கொடுப்பீர்களானால், இன்னும் இவற்றைப் போல் உள்ளுக்குள் தகாதன செய்து கொண்டு-வெளியில் சில நல்ல காரியங்களைச் செய்வீர்களானால் அவற்றால் ஒரு சிறிதும் பயனில்லை. அவையெல்லாம் துணையாகா. எல்லாவற்றிற்கும் அடிப்படையான நல்லொழுக்கமே நற்றுணையாவது” என்று சுட்டாமல் சுட்டியுள்ளார்

‘பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அ.தே துணை.’ என்ற குறளால்