பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வள்ளுவர் இல்லம்

அடுத்து, சாதிமுறை பற்றி ஆசிரியர் கூறும் கருத்து

ஈண்டுக் கருதற்பாற்று.

‘ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.”

என்னுங் குறளில் சாதி என்பது என்ன என்பதை வள்ளுவர் தெள்ளத்தெளியத் தெரிவிக்கிறார். ஒழுக்கமுடைமையால் ‘பார்ப்பார் முதலிய வகுப்பினர் உயர் குலத்தாராகப் பகுக்கப்பட்டார்கள் என்றும், ஒழுக்கமின்மையால் பறையர் முதலிய வகுப்பினர் தாழ்குலத்தாராகப் பகுக்கப்பட்டார்கள் என்றும் சில ஆராய்ச்சியறிவிலிகள் உளறுகின்றனர். மேலும் சிலர், உயர் குலப் பார்ப்பான் ஒழுக்கம் தவறி விட்டால் தாழ் குலத்தானாவான் என்றும், தாழ்குலப் பறையன் ஒழுக்கம் உயர்ந்து விட்டால், உயர்குலத் தானாவான் என்றும் குளறுகின்றனர். இக்கருத்துக்கள் எல்லாம் தவறுடையவை.

பார்ப்பான் - பறையன் என்னும் சாதிப் பிரிவினை, அன்று ஒழுக்கமுடைமையையும் இன்மையையும் கருதிப் பிரிக்கப்பட்டதன்று. அவரவர்கள் செய்யும் தொழிலைக் கருதியே தொழிலுக்கேற்ற பெயர்கள் தரப்பட்டன. எடுத்துக்காட்டாக, - கணக்கு வேலை செய்பவரைக் கணக்குப்பிள்ளையென்றும், பாடம் கற்பிப்பவரை ஆசிரியர் என்றும், ஊர் நாட்டாண்மை செய்பவரை நாட்டாண்மைக் காரர் என்றும், சமையல் செய்பவரைச் சமையற்காரர் என்றும் இப்பொழுதும் நாம் அழைக்கின்றோம் அல்லவா? இதே போலத்தான் பண்டைக் காலத்தில் யார் யார் எவ்வெத்தொழில் செய்தனரோ, அவ்வத்தொழிலால்