பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வள்ளுவர் இல்லம்

செய்கையுடையவனாயிருப்பின் அவன் உயர்ந்தவன்; அண்ணன் தீக்குண - தீச் செய்கையுடையவனாயிருப்பின் அவன் தாழ்ந்தவன். இது போலவே பார்ப்பார்க்கும் பறையர்க்கும் இடையேயும் கொள்க. மற்றும், அடுத்த குறளும் ஈண்டு ஒப்பு நோக்கி ஆராயத்தக்கது.

‘மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.”

பார்ப்பான், தனக்குரிய தொழிலாகிய ஒதுதல் - ஒது வித்தலை மறந்தாலும் மறக்கலாம்; நல்லொழுக்கத்தை மட்டும் மறந்து கைவிடலாகாது. ஏனெனில், ஒதுதலை விட்டால் மீண்டும் ஒதிக்கொள்ளலாம். அது குறித்து அவனை அவ்வளவாக இகழ மாட்டார்கள். ஆனால் முதலில் தீயொழுக்கத்தில் நடந்து விட்டால், மீண்டும் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்க முயன்றாலும் கெட்ட பெயர் கெட்ட பெயர்தானே? அதனால் தான் ஒதுதலை விட ஒழுக்கத்தில் விழிப்பு மிக வேண்டும் என்றார் ஆசிரியர். இன்னும் இதனை மற்றொன்றாலும் அறியலாம். அது வருமாறு:- திருவள்ளுவர் ‘கல்வி’ என்னும் பகுதியில்,

“எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு.” ‘கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.” எனக் கல்வியைக் கண்ணினும் சிறந்ததாகக் கூறியுள்ளார். இவ்வதிகாரத்து முதற்குறளில், ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் என்று கூறியுள்ளார். எனவே, கண்ணைவிடக்