பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 113

கல்வியையும் உயிரையும் விட ஒழுக்கத்தையும் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாராயிற்று. ஆயின், கண் இன்றி வாழமுடியும் - உயிரின்றி வாழமுடியுமா? அது போலவே, கல்வியின்றி வாழ்ந்தாலும் ஒழுக்கமின்றி வாழக் கூடாது - எனவே ஒத்தினும் (ஓதுதலினும்) ஒழுக்கமே மேலானது என்பது தெளிவு. இக்கருத்தைத்தான் ஆசிரியர் இக்குறளில் குறிப்பாகக் (தொகுத்து) கூறியுள்ளார். நிற்க -

ஒழுக்கம் குறித்தே சாதிப் பிரிவினை ஏற்பட்டது என்னும் கருத்துடையோர், தம் கொள்கைக்கு ஆதாரமாக இக் குறளை எடுத்துக் காட்டலாம். அஃதாவது பார்ப்பான் ஒழுக்கம் குன்றினால் பிறப்புக்கெடும் என்று வள்ளுவர் கூறியிருப்பதால், ஒழுக்கத்தைக் கொண்டுதான் பார்ப்பான்பறையன் என்ற சாதிகள் வகுக்கப்பட்டன என்பது விளங்க வில்லையா - என்று அவர்கள் சொல்லலாம். இக்குறளின் கருத்து இஃதன்று. ஒழுக்கத்தைக் குறித்தல்லாமல், தொழிலைக் குறித்தே சாதி வகுக்கப்பட்டது என்னும் நற் கருத்துக்கு, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் குறளோடு இந்தக் குறளும் ஆதாரமாகும்.

எங்ஙன மெனின் -

வள்ளுவர் இக்குறளில், பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்று மட்டும் சொல்லவில்லை. மறப்பினும் ஒத்துக் கொளலாகும்’ என்றும் கூறியிருப்பதை ஆழ்ந்தாராய வேண்டும். வேதம் ஒதலை மறந்தாலும் மறக்கலாம், ஒழுக்கத்தை மறக்கலாகாது என்பதிலிருந்தே, வேதம் ஒதுதலும் மிக மிக இன்றியமையாதது என்பது புலப்படும்.