பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வள்ளுவர் இல்லம்

திருடரிடம் அகப்பட்டுக்கொண்ட வீரனொருவன், என் உயிரைவிட்டாலும் விடுவேன், இந்தப் பொருளை மட்டும் விடமாட்டேன்’ என்கிறான். அப்படியென்றால். உயிர்விடக் கூடாத பொருள் - எல்லாவற்றினும் உயர்ந்த பொருள் என்பது தெரிகிறதன்றோ? அதுபோலவே வேதமோதுதலும் மறக்கக் கூடாத ஒன்று - எல்லாவற்றைக் காட்டிலும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்பதும் புலப்படும். ஏனெனில், அவ்வேதம் ஒதிப் பிழைக்கும் தொழிலைக் கொண்டுதானே, அது செய்பவன் மறையவன் (பார்ப்பான்) என்று அழைக்கப்பட்டான். ஆதலின் என்க! எனவே பார்ப்பான், தான் பார்ப்பன சாதியான் என்று அழைக்கப்படுவதற்கே காரணமான-பிழைப்புத் தொழிலான வேத மோதலை மறக்கக்கூடாது; தப்பித்தவறி மறந்தாலும் மீண்டும் ஒதிக்கொள்ளலாம் - அல்லது - வேறு தொழில் செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், மனித இனத்திற்கே பொதுவாக இருக்க வேண்டியதான ஒழுக்கம் மட்டும் குறையலாகாது. அங்ஙனம் குறைந்ததால், உயர்ந்த வனாகத் தன்னை எண்ணிக் கொண்டிருக்கின்ற அவனது பிறவியும் பயனற்றதுதான் - இழிந்ததுதான்.

அதுமட்டுமா? பொறாமைக் குணம் உடையவன் பிறருடைய உடைமை, புகழ் முதலியவற்றைக் கண்டு கண்டு, நெஞ்சம் புழுங்கிப் புழுங்கிச் சாவானாதலாலும், அவன் ஒன்றும் செய்ய முடியாதாதலாலும், பிறரது உடைமையையோ - புகழையோ பொறாமையால் கெடுக்க முயன்றபோது பிறரால் தாக்கப்படுவானாதலாலும் அவ னிடத்தில் எத்தகைய நல்வளர்ச்சியும் இருக்க முடியாது;