பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 123

நம்பியவன் மனைவியைக் கெடுத்து நம்பிக்கைக்கேடு (துரோகம்) செய்தவன், உயிருள்ளவனாகக் காணப்படினும், அவன் இறந்துபோனவனாகவே கருதப்படுவான். இறந்து போனவன், தன்னை நம்பியுள்ள தாய் தந்தையர், மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியோரை யெல்லாம் ஏமாற்றிவிட்டான் அல்லவா? அதுபோலவே, நண்பனின் மனைவியைக் கெடுத்தவனும் அவனை ஏமாற்றிவிட்டான் அல்லவா? மற்றும், நம்பிய நண்பனை ஏமாற்றக் கூடாது (துரோகம் செய்யக்கூடாது) என்னும் உணர்ச்சி யில்லாமையால், இக்கயவனை உயிருள்ளவனாக எங்ஙனம் மதிப்பது உயிரிருந்தால் உணர்ச்சியிருக்குமே! மற்றும், பல பெண்களின் நடுவில் வாழும் இவனது உடம்பு அழுகின்ற பல பெண்களின் நடுவே கிடக்கும் பிணத்திற்கு ஒப்பன்றோ? மேற்கூறிய காரணங்களினாலேயே, பிறர்மனை விரும்பியவன் பிணமாக்கிக் கூறப்பட்டான். இக்காலத்தும், மக்களுக்குக் கேடு செய்த அரசியல் தலைவர்களுக்குக் கொடும்பாவி கட்டியிழுக்கும் வழக்கம் இருக்கின்ற தல்லவா? கொடியவர் உயிருடன் இருக்கும்போதே, அவர்களைப் பிணமாகக் கருதி, அவர்கட்குக் கொடும்பாவி கட்டியிழுக்கும் செயலின் உண்மை (தத்துவம்) நோக்கம் இப்போது நன்கு புரிகின்ற தல்லவா?

பெரிய மனிதரெனப் பேர் பெற்ற ஒருவர், சிறிதும் நல்லுணர்ச்சியின்றிப் பிறன் மனையாளோடு கூடினால், அது தீமையைத் தவிர ஒரு நன்மையினையும் செய்யாது. ஏன் எனில், கூடும் போது யாராவது அறிந்து தாக்கி னால் என்ன செய்வது? பின்னரும் வெளியில் தெரிந்து