பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வள்ளுவர் இல்லம்

விட்டால் என்ன ஆவது? என்ற அச்சம் தோன்றுவதால் இன்பம் சிறவாது ஆதலானும், பின்னரும் நோயும் பழியும் உண்டாமாதலானும் அக்கூட்டுறவால் நன்மையில்லை என உணர்க. எனவே, இத்தகைய இழி தொழில் கொண்ட வர்க்கு ஏனைய தகுதிகள் இருந்தும் ஒன்றும் பெருமை யில்லையாதலான் அத்தகுதிகளை இழந்தவராகவே கருதப் படுவார்.

‘அறன்கடை கின்றாருள் எல்லாம் பிறன்கடை

கின்றாரிற் பேதையார் இல்.” “விளிக்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்தொழுகு வார்.’ ‘எனைத்துணைய ராயினும் என்னாம்

தினைத்துணையும் தேரார் பிறனில் புகல்.”

மற்றைய குற்றம் செய்தவரின் வடு நாளடைவில் மறைந்துவிட்டாலும் மறைந்து விடலாம்; பிறனில் விழைந்த வனுக்கு எய்திய வடுவோ எந்நாளும் மறையவே மறையாது.

பிறன் மனைவியை விரும்பியவனுக்கு, அவள் இருக்கும் இடத்தை நோக்கிப் போகும்போதும் அச்சம் - அவ்விடத் துக்குள் நுழையும் போதும் அச்சம் - அவளோடு இன்பம் நுகரும்போதும் அச்சம் - அவளை விட்டுப் பிரிந்த பின்னரும் அச்சம் உண்டாவது இயற்கை. காரணம், உடையவனாவது பிறராவது கண்டு விட்டால் என்ன செய்வது என்ற கோழைமையே!