பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வள்ளுவர் இல்லம்

திருப்பது சிறந்ததாதலின் “பிறன் மனைவி எண்ணாத பேராண்மை’ என்று ஏன் வள்ளுவர் கூறியிருக்கக்கூடாது? என்று சிலர் வினவலாம். அங்ஙனம் கூறுவது பொருந்தாது. ஒரு பெண்ணின் அங்க-அடையாள-அழகை உற்று நோக்கின. பின்புதானே மனம் அவளையறிந்து பின் எண்ண முடியும். ஆதலின், மனம் எண்ணுவதற்கும் முற்பட்ட செயல் கண் நோக்குதல் ஆகும். அதனாலேயே வள்ளுவர் நோக்காத பேராண்மை’ என்றார். இந் நுட்பத்தை அறியாதிருக்க வள்ளுவர் என்ன கிள்ளுகீரையா?

வழியிலே கட்டழகி யொருத்தியைக் கண்ட பொழுது உணர்ச்சியுள்ள ஆண்மகன் ஏறெடுத்துப் பார்க்காமல் இருக்க முடியுமா? உணர்ச்சியற்ற பேடிதான் வாளா செல்வான்! என்று சிலர் சொல்லலாம். கட்டழகி சென்றால் பார்க்கக் கூடாது என்று வள்ளுவர் சொல்லவில்லை. ஓர் ஆண் மகனோ, ஒரு மாடோ சென்றால் அவனையும், அதனையும் எந்நோக்கத்தோடு நாம் பார்ப்போமோ? அந் நோக்கோடேயே அக்கட்டழகியைப் பார்ப்பதை வள்ளுவர் மறுக்கவில்லை. தம் உணர்ச்சியைச் செலுத்தி உவகை யுறும் நோக்கத்தோடு அவளைப் பார்க்கக்கூடாது. அவ் வுணர்ச்சியைத் திருப்பி மனைவியிடம் செலுத்த வேண்டும் என்பதுதான் கருத்து. பசித்த ஒருவன் வழியில் (பலகாரக் கடை) சிற்றுண்டிக்கடையைக் கண்டால் திருடித்தின்னாமல் இருக்க முடியுமா? என்று கேட்க முடியுமா? பசித்தால், தன் உழைப்பால் கிடைக்கும் தன் உடைமையைத் தானே உண்ண வேண்டும்? அஃதே போல் இ.தும் கொள்க!