பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 வள்ளுவர் இல்லம்

விரும்பாதவர்க்கு இத்தீமைகளுள் யாதொன்றும் வராது என்பதும் உறுதி! தீமை ஒன்றும் இல்லையெனவே நன்மைகளே உண்டாகும் என்பதும் உறுதி! ஆதலின், நன்மைக்கு உரியவர் பிறர்மனை விரும்பாதவரே என்று வரும் குறளில் கூறுகிறார் ஆசிரியர்.

‘நலக்குரியார் யார்எனின் நாமர்ே வைப்பிற்

பிறற்கு உரியாள் தோள்தோயா தார்.”

உலகில் வறுமை - பிணி முதலியவற்றால் வருந்தும் சிலரை நோக்கி ‘இவர் இளமையில் ஏராளமாக விளையாடி விட்டார், அதன் பயன்தான் இது!’ என்று உலகத்தார் அவரது கூடா ஒழுக்கத்தைச் சுட்டுவதையும், நரை திரை முப்பின்றி நீண்ட நாள் வாழ்பவரை நோக்கி “இவர் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்; எத்தீமையும் புரிய மாட்டார் - இது தான் இவருடைய வயதை வளர்க்கின்றது!’ என்று உலகினர் அவரது நல்லொழுக்கத்தைச் சுட்டுவதையும் நாம் காண்கின்றோமல்லவா? அதைத்தான் வள்ளுவரும் பிறற் குரியாள் தோள்தோயாதவர் நன்மைக்குரியவர் என்றும், தோய்ந்தவர் தீமைக்கு உரியவர் என்றும் சுட்டிக் கூறினார்.

நாமம் என்றால் மிகுதி. கடல், ஏனைய நீரோட்டம்நீர்த்தேக்கங்களைவிட மிகுதியான நீரைத் தன்னிடத்தே உடையதாதலின் ‘நாமநீர்’ என்று சிறப்பிக்கப் பெற்றது. இவ்வுண்மையுணராத பரிமேலழகர் முதலிய பல உரை யாசிரியர்கள் நாமம் என்பதற்கு அச்சம் எனப் பொருள் கொண்டு, அச்சத்தைத் தரும் கடல்நீர் என்று பொருள்