பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வள்ளுவர் இல்லம்

என்பதை உணர்க. இச்சொல் இப்பொருளும் தரும் என்பதை ‘நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய் மொழி மகனோடு’ என்னும் பரிபாடல் (ஒரு சங்கநூல்) அடியாலும் தெளிக.

ஒருவன் இன்னின்னவை அறச்செயல்கள்-இவற்றைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று வரை யறுத்து (திட்டமிட்டு)க் கொண்டு அவற்றைக் கடைப் பிடித்து ஒழுக வேண்டும்; அப்படி ஒழுக முடியவில்லை யாயின் செய்யக்கூடாத வேறு எந்தக் கொடுமைகளைச் செய்தாலும், பிறன் மனை விரும்பும் பெரிய கொடுமையை மட்டும் செய்யவே கூடாது.

‘அறன்வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்

பெண்மை நயவாமை நன்று.”

வள்ளுவர் கூறுவது இருக்கட்டும் - நாமே எண்ணிப் பார்ப்போமே! மனைவியோடு கூடி வாழும் இல்லறத்தான் ஒருவன், தான் இன்னொருவனுடைய மனைவியை விரும்புவானேயானால், தன் மனைவியும் இன்னொருவனை விரும்புவதற்கு ஒப்புதல் அளித்து வழிவகுத்துக் கொடுத்தவ னாகிறான் என்பதுதானே அதற்குப் பொருள்! மேலும் அவன், இன்னொருவனோடு உடல் தொடர்பு கொண்ட இன்னொருத்தியோடு தான் உடல் தொடர்பு கொண்டு விட்டு, மீண்டுவந்து தன் மனைவியோடு உடல் தொடர்பு கொள்வதன் முலம், அந்த இன்னொருவனுடைய உடல் தொடர்பை மறைமுகமாகத் தன் மனைவிக்கும் உண்டாக்கிய வனாகிறான். இதனால் ஏற்படும் பொல்லாத விளைவுகளை யெல்லாம் இல்லறத்தார்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.