பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 135

“பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று’.

ஈண்டு இறத்தல் என்றால் கடத்தல் என்று பொருள். எனவே இறப்பு என்பது, முறை கடந்து - அளவு கடந்து பேசும் பேச்சினையும் செய்யும் செயலினையும் குறிக் கின்றது. நம்மிடம் பிறர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் பிறரால் துன்புறுத்தப் படும்போது, திரும்ப அவரைத் தாம் துன்புறுத்த இயலாமை யால், அவரைப் பொறுத்துக் கொண்டதுபோல் நடித்து விட்டு, பின்னர் சமயம் வாய்த்த போது வன்மையாகத் தாக்குகின்றார்கள் அல்லவா? அது கூடாது. அதனைப் பொறுத்துக் கொண்ட அங்கேயே - அப்போதே மறந்தும் விடவேண்டும். மறக்காமல் இருந்தால் மேன்மேலும் பகை வளர்ந்து தீமை பெருகுமே தவிர நன்மை பெருகா தாக லானும், பொறுப்பதால் அப்போது மட்டும் தீமை விலகும். மறத்தலால் எப்போதுமே தீமை விலகிவிடும் ஆதலானும் பொறுத்தலைவிட மறத்தல் இன்னும் நன்று என்றார் வள்ளுவர்.

சிலர், செல்வமும் உடல் வலிமையும் இல்லாத ஏழை யராகவும் கோழையராகவும் உள்ளபோது எவர் என்ன செய்யினும் பொறுத்துக் கொள்கின்றனர். ஆனால் அவரே செல்வமும் உடல் வலிமையும் உண்டாய்விட்டபோது, எவரிடமும் அணுவளவு பொறுமையும் காட்டுவதில்லை. இன்னவர் முடியாதபோது காட்டும் பொறுமைக்கு ஒரு பொருளோ - சிறப்போ இல்லை. ஆதலின், இன்னவர் தமக்கு எல்லாம் இருக்கும்போது முன் போலவே பொறுமை