பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 137

ஆளாகுபவன் வீரனா? ஒரடியும் ஒரு துன்பமும் ஒரு பழியும் பெறாத பொறுமைசாலி வீரனா? பொறையுடை யானே வீரனாதலால்தான், வன்மையுள் வன்மை பொறுமை என்றார் ஆசிரியர். கத்தி தீட்டுவதைவிட - புத்தி தீட்டுவதும், வீரியத்தைவிட - காரியமும் பெரியன என்பதையே வள்ளுவர் இக்குறளில் வேறு சொற்களால் குறித்துள்ளார்.

ஒருவன் நம்மைத் தாக்கினால், நாம் வாளா இருந்தால் அவனுக்கு எளிதாய்விடாதா? இடம் கொடுத்ததாய்விடாதா? மீண்டும் எளிதில் வந்து தாக்குவானல்லவா? எனவே நாம் மீண்டும் தாக்கினால்தானே அவன் அஞ்சி மறுமுறை நம்மிடம் வர மாட்டான்? என்று சிலர் வினவலாம். உண்மை அஃதன்று. நாம் திரும்பத் தாக்கினால் அறிவுடையவன்தான் அஞ்சி அடங்குவான்; அறிவில்லா தவன் மீண்டும் மீண்டும் சினம் (குரோதம்) கொண்டு தொடர்ந்து தாக்குவான். அறிவில்லாமல் குலைக்கும் வெறி நாயின்மேல் கல்லெடுத்துப் போட்டால் அது குலைப்பதை நிறுத்தாமல் மேன்மேலும் குலைத்துக் கொண்டேயிருக்கும். அதன்மேல் எறிய வேண்டிய பொருள் கல்லன்று. வெல்லக் கட்டியே! அதனால் வள்ளுவரும் அறிவில்லாதவனைப் பொறுத்துக் கொண்டுதான் தீரவேண்டும் என்பதனை வற்புறுத்துவதற்காக மடவார்ப் பொறை’ என்று கூறினார். ஊதியத்தை விரும்பியவரிடத்திலேயே உழைப்பு இருக்கும். அது போல, நிறையை விரும்பியவரிடத்திலேயே பொறை இருக்கும். எனவே, ஊதியத்திற்கு உழைப்பு