பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 141

உண்ணா நோன்பு (விரதம்) கொண்டு எடுத்த காரியத்தை முடித்த காந்தியடிகள் பெரியவராக உலகில் பாராட்டப் பெற்றார்:

ஆயின், பலவேளை பட்டினி கிடக்கும் ஏழைகளை நாம் ஏதாவது வைவோமானால் அவர்கள் அதனைப் பொறுத்துக் கொள்ளாமல், தங்களது பேச்சால் தம் வெறுப்பை நம்மிடம் தெரிவிக்கின்றனர்.

எனவே, பசியைப் பொறுக்கும் அவர்களால் பிறரைப் பொறுக்க முடியவில்லை என்பது தெளிவு.

எனவே, பசியைவிடக் கொடியது-பிறர் சொல்லும் இன்னாச்சொல்லே என்பதும், உண்ணாது நோற்றலைவிடஇன்னாச்சொல் நோற்றலே அருமை என்பதும், அதனால், உண்ணாது நோற்பவர் இன்னாச்சொல் நோற்பவருக்குப் பிற்பட்டவரே - அடுத்தபடியானவரே என்பதும் நன்கு விளங்கும். மற்றும், காரிய வெற்றிக்காக உண்ணாது நோற்பவர், பிறர் சொல்லும் இன்னாச்சொல்லையும் நோற்பார் என்பது என்ன உறுதி! எனவே உண்ணாது நோற்பதோடு, இன்னாச்சொல்லையும் நோற்பது (பொறுப்பது) மிகச் சிறந்தது; அவரது பெருமை சொல்லும் அளவினதன்று.

“துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.’ ‘உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்'