பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வள்ளுவர் இல்லம்

பொறாமைப் படாது பேணுதல் (போற்றுதல்) செய்பவன், அப் பிறனாலும் உலகினராலும் அற ஒழுக்கம் உள்ள வனாகச் சிறப்பிக்கப் பெறுவான்; அதுவுமன்றி, தனக்கு மனமும் சூழ்நிலையும் சரியாயிருப்பதால், அப்பிறனோடு ஒத்துழைத்தோ, அல்லது தனியாக இருந்தோ, தானும் தொழில் செய்து பொருளீட்டுவான். ஆதலால், பிறனாக்கம் கண்டு பேனுபவன் அறனும் ஆக்கமும் உடையவனாவான்.

‘அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறும் பான்.”

தீயொழுக்கத்தால் துன்பம்வரும் என்பதையும், அழுக் காறு ஒரு தீயொழுக்கம் என்பதையும், (ஆதலின்) பிறர்மேல் அழுக்காறு கொண்டு அவர்க்குத் தீங்குகள் செய்யக் கூடாது என்பதையும் அறிந்து, அறிந்தவண்ணம் ஒழுகு பவர்களே உயர்ந்தவர்கள்.

‘அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து’.

பொறாமைக் குணம் உடைய ஒருவனுக்குத் துன்பம் செய்யப் பகைவர் யாரும் வேண்டியதில்லை; அவனது பொறாமைக் குணம் ஒன்றே போதும்! அதுவே அவனுக்குப் பெரும் பகை மற்றைய பகைவர்கள் செய்யக்கூடிய துன்பங்களையெல்லாம் ஏன் - பகைவர்களால் செய்ய முடியாத துன்பங்களையும்கூட, அப்பொறாமை யென்னும் பெரும் பகையே அவனுக்குச் செய்து முடித்துவிடும். துன்பம் செய்யப் பகைவர் தவறிவிட்டாலும், அப் பொறாமை தவறாது.