பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வள்ளுவர் இல்லம்

“ஈவது விலக்கேல்’ என ஒளவையாரும் அருளியுள் ளாரன்றோ! ஒருவர் மற்றொருவர்க்கு உதவுவதைத் தடுப்பவன், அவர் உதவி செய்யக்கூடாது என்பதற்கு என்ன காரணம் கூறுகின்றானோ, அதே காரணத்தை, அவன் பிறரிடம் உதவி கேட்ட பொழுதும் அவனுக்கு அவர் கூறி உதவ மாட்டாரன்றோ. ‘அன்று ஒருவனுக்கு உதவி செய்யக்கூடாது என்று தடுத்தாயே - உனக்கு மட்டும் உதவி செய்வது எங்ஙனம் பொருந்தும் ‘அவன் கெட்டான் குடிகாரன்- எனக்கு இரண்டு மொந்தை போடு’ என்ற குடிகாரன் பேச்சாகவே இருக்கிறதே உன் பேச்சு!” என்று கூறி அவனை விரட்டி விடுவார்கள் அல்லவா? இவ்விதம் ஈவது விலக்கியவன் கெடவே அவன் குடும்பத் தினரும் கெடுதல் இயற்கைதானே! யாரும் எப்போதும் பிறருடைய சிறிய உதவியும் இன்றி வாழமுடியாததால், ஒருவர் மற்றொருவரிடமிருந்து உதவி பெறுவதைத் தடுப்பது கொடுந்தீவினையல்லவா? மனிதன் தான் தரமுடியா விட்டாலும், பிறர் தருவதையாவது தடுக்காமல் இருப்பது நல்வினையல்லவா? ‘தன்வினை தன்னைச் சுடும்’ ‘கெடுவான் கேடு நினைப்பான்’-என்னும் முதுமொழிகட் கிணங்க, கொடுப்ப தழுக்கறுப்பான் ஊண்-உடையின்றிக் கெடுவான் என்றால், அவனை எதிர்பார்த்து வாழும் அவனுடைய பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளைகள் முதலிய நெருங்கிய குடும்பச் சுற்றத்தாரின் நிலையென்ன? அம்மியே காற்றிலே பறக்கும்போது எச்சிலிலையின் நிலை என்னவோ, அதுதான் அவன் சுற்றத்திற்கும்!

பொறாமை யுடையவனிடத்தில் திருமகள் (சீதேவி) இருக்க மாட்டாள்; கரிய முகடிதான் (முதேவிதான்)