பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 147

இருப்பாள். அஃதாவது - செல்வம் இராது; வறுமைதான் வாட்டும். நம் நாட்டில் சில பொருள்களைப் பெண்ணாகச் சொல்வது வழக்கம். உண்மையில் அவை பெண்ணல்ல. எடுத்துக்காட்டாக, - தமிழைத் தமிழ்த்தாய்’ என்கிறோம். தாயாவது - சேயாவது இந்தியாவை “பாரத மாதா” என்கிறோம். மாதாவாவது - பிதாவாவது அதுபோலவே, செல்வத்தைத் திருமகளாகவும், ஏழ்மையை முகடி (முதேவி) யாகவும் கூறி வந்தனர் நம் மக்கள். மேலும், வறுமையின் தொல்லையைக் கருதியும், வறியோர் ஏதும் செய்ய முடியாது வாடிவதங்கிச் சோர்ந்து கிடப்பதைக் கருதியும், அவ்வறுமையை, வயதில் முத்து முதிர்ந்து அழகிழந்து சோர்ந்து தூங்கும் முதேவிப் பெண்ணாக உருவகித்தனர். செல்வத்தின் சிறப்புக் கருதியும், செல்வர்கள் அழகாய்ஆடம்பரமாய் - விளக்கமாய் வாழ்வதைக் கருதியும், அச் செல்வத்தை, வயதில் இளைய அழகிய விளக்கமான திருமகளாக உருவகித்தனர். இளையவளைத் தங்கை யெனவும், முத்தவளை தமக்கை யெனவும் வழங்குவது வழக்கந்தானே! மற்றும் செம்மையை (சிவப்பை) மங்கல முடைமைக்கு அடையாளமாகவும், கருப்பை மங்கள மின்மைக்கு அடையாளமாகவும் கூறும் வழக்கமும் நம் மக்களிடையே இருப்பதற்கேற்ப, திருமகளைச் சிவந்தவள் (செய்யவள்) ஆகவும், முதேவியைக் கரியவள் ஆகவும் கூறிவருகின்றனர். ஆகவே அழுக்காறு உடையவனுக்கு, முன்னோர் ஈட்டி வைத்துப் போன செல்வம் இருப்பினும் அது, தன் இடத்தை வறுமைக்கு விட்டுத்தான் சென்று விடும் என்பது வள்ளுவர் கருத்து.