பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 149

இம்முறை மாற்றத்திற்குக் காரணம் என்ன? - என்பது கருதப்பட வேண்டிய - ஆராயப்படவேண்டிய செய்தியாகும். அங்ஙனம் கருதியாராயுங்கால், அம்முறை மாற்றத்தின் காரணமாக நமக்குக் கிடைக்கும் பதில் என்ன? என்பதைக் கருதுவோம்:

அவ்விய நெஞ்சினன் ஆக்கத்தோடு வாழ்வதைக் காணும் உலகினர், “அயோக்கியனுக்குத்தான் இது காலம்! இவன் இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் வாழ்வான் என்பதைப் பார்ப்போம்! இன்னும் இவனுடைய ஊழல் அரசியலாருக்குத் தெரியவில்லை! தெரிந்த இரண்டொரு வருக்கும் இவன் எலும்புத் துண்டை (இலஞ்சம்) போட்டு விடுகிறான். இருக்கட்டும்! பல நாள் திருடன் ஒரு நாளைக்கு அகப்பட்டுக்கொண்டுதானே தீரவேண்டும்’ என்றே நினைக்கின்றனர் அல்லவா? இத்தீயோனுடைய ஊழலை அரசியலார் அறிந்தபோது தீய வழிகளில் ஈட்டிய இவனது பணத்தையும் பறித்து, இவனுக்கும் தண்டனை விதிப்பார்கள். அதன் பின்னர் இவனது ஆக்க வாழ்வு மங்கும். எனவே, தீயவன் ஒருவன் தீய வழிகளில் பொருளீட்டி வளர்ச்சியோடு வாழ்வதற்குக் காரணம், இவனது ஊழலை, அரசியலார் நன்கு தெரிந்து கொள்ளாமையும் அதற்கேற்ற தண்டனை விதிக்காமையுமே யாகும் - என்று அவ்விய உளத்தனது ஆக்கம் உலகினரால் நினைக்கப்படும்.’

மற்று, செவ்வியான் கேடுற்று வருந்துவதைக் காணும் உலகினர், “யோக்கியனுக்கு இது காலமில்லை. பாவம் இவர் நல்ல மனிதர்! இவருடைய குணமறிந்து-செயலறிந்து