பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வள்ளுவர் இல்லம்

உலகம் இவருக்குக் கடமைப்படுவது எந்நாளோ! பார்ப்போம்! காலம் இப்படியேவா இருந்து விடும் ஒரு நாளைக்கு இவர் கொல்லையிலும் மழை பேயாதா? என்று நினைக் கின்றனரல்லவா? இவரது குணச் சிறப்பை-தொண்டின் பயனை உலகினர் புரிந்துகொண்டபோது இவருக்கு எண்ணற்ற பரிசுகளும் - சிறப்புக்களும் அளித்துப் பாராட்டுவார்கள். வறுமையால் வாடிய பழைய தமிழ்ப் புலவர்களை எடுத்துக் கொள்வோம் - ஏழ்மையில் வாழ்ந்த பல அரசியல் தலைவர்களை எடுத்துக்கொள்வோம் - அமெரிக்க ஆல்வா எடிசனைப் போன்ற விஞ்ஞானி களையும் எடுத்துக்கொள்வோம். இவர்களின் திறமையினை-தொண்டினை உலகம் புரிந்துகொண்டபின் இவர் கட்குப் பெரும் பொருளும்-பெரும் புகழும் வாரி வாரி வீசவில்லையா? எனவே, செவ்வியானது கேட்டிற்குக் காரணம் செம்மையை மன்பதை (சமுகம்) புரிந்து கொள்ளாமையும், அதற்கேற்ற சிறப்பினைச் செய்யாமையுமே யாகும் என்று செவ்வியான் கேடு உலகினரால் நினைக்கப் படும். கவி - சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த காலத்தில் தமிழகம் புரிந்து கொள்ளாமையாலன்றோ அவர் வறுமையில் வாடினார். எனவே அவ்வியானது ஆக்கத்திற்கும் செவ்வி யானது கேட்டிற்கும் காரணம், அவர்களைப் பற்றிப் பொது மக்களும் அரசியலாரும் புரிந்து கொண்டு ஏற்ற நடவடிக்கை எடுத்துக் கொள்ளாமையேயாகும் - என்று நினைக்கப்படும்.

உண்மையில் ஆராய்ந்து பார்க்கின், பொறாமை யுடையவன் வளமாக வாழ்ந்ததுமில்லை; பொறாமை