பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 151

யில்லாதவன் வளமின்றிக் கெட்டதுமில்லை. எனவே, பொறாமை உடையவன் கெடுவான், பொறாமை யில்லாதவனே வாழ்வான் - என்பது புலனாகும்.

முன்பு கூறியாங்கு முறை மாறிப் பொறாமை உடையவன் வாழ்ந்தாலும், பொறாமையில்லாதவன் கெட்டாலும், அந்நிலை நெடுக நிலைக்காமல், பின்னொரு காலம் மாறிச் சரியான முறைக்கு வந்துவிடும். ஒருவேளை இறக்கும்வரையுமே கெட்டவன் ஆக்கமும், நல்லவன் கேடும் பெற்றிருந்தாலுங்கூட, அவர்கள் இறந்தபின்னர், கெட்டவ னுக்கும் அவன் பரம்பரைக்கும் இகழும், நல்லவனுக்கும் அவன் பரம்பரைக்கும் புகழும் உலகம் உள்ளளவும் நின்று நிலைத்துவிடுமல்லவா?

‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.” ‘அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்."