பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வெஃகாமை

வெஃகாமை என்றால் பிறர் பொருளைக் கவர விரும்பாதிருத்தல். அழுக்காறாமையைப் போல் வெஃகாமை யும் வேண்டியது தானே!

ஒருவன் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பிறர் அரும்பாடுபட்டு நல்வழியில் ஈட்டிய நல்ல பொருளைக் கவர்ந்தால், தான் எண்ணியதற்கு மாறாகத் தன் குடும்பமும் கெடத் தானும் என்றும் நீங்காத குற்றச் சாட்டிற்கு உள்ளாவான்.

நடுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.’

தன் பொருளைப் பிறன் கவர்ந்தால் தனக்கு எப்படி இருக்குமோ, அதுபோலவே, பிறன் பொருளைத் தான் கவர்ந்தாலும் அவனுக்குத் துன்பம் நேரிடும் என்னும் நடு நிலைமையுணர்ச்சி யுடையவர்கள் பிறன் பொருளைக் கவர நினையாராதலின் ‘நடுஇன்றி” என்றார் ஆசிரியர். பிறன் தீயவழிகளில் ஈட்டியதீய பொருளைத் தப்பித்தவறிக் கவர்ந்தாலும் அவன் தீய வழிகளில் ஈட்டியதற்குத் தரப் பட்ட தண்டனை போலாகும்; அப்படியின்றி நல்ல வழியில் ஈட்டிய பொருளைக் கவரவே கூடாது என்பதற்காகவே ‘நன்பொருள் என்றார். தீய பொருளைக் கவர்ந்தால் உண்டாகும் பழியைவிட நல்ல பொருளைக் கவர்ந்தால்