பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 153

உண்டாகும் பழியே மிக்கது என்பது கருத்தே தவிர, பிறரது தீய பொருளைக் கவரலாம் என்பது கருத்தன்று. பிறன் பொருளைக் கவர்ந்தவன் அரசாங்கத்தாரால் அறியப்பட்டு கவர்ந்ததையும் இழந்து சிறைக்குச் செல்வான். ஆதலால் அவனோ அவன் குடும்பமோ உருப்பட முடியுமா? உருப் படாததோடு ஆழமான குற்றச்சாட்டும் நீங்காதல்லவா?

தம் பொருளைப் போலவே பிறர் பொருளையும் பாதுகாக்க எண்ணும் நடுநிலைமையுடையவர்கள், பிறரிட மிருந்து கவரும் பொருளால் தாம் இன்னின்ன நன்மைகள் அடையலாம் எனக் கருதி அவாக் கொண்டு பல பழிச் செயல்களைச் செய்து பிறர் பொருளைக் கவரமாட்டார்கள்.

எனவே, நடுநிலைமை யுணர்ச்சி யில்லாதவரே பிறர் பொருளைக் கவர்ந்து பயன் துய்ப்பர் என்பது கூறினாரா யிற்று.

பழிச் செயல்களாவன:

திடீரென்று புகுந்து திருடர்கள் திருடும் திருட்டைக் குறிக்கவில்லை இங்கு! நல்லவர் போன்று நடித்துக் கொண்டு கையூட்டு (இலஞ்சம்) வாங்குதல், கள்ள வாணிகம் செய்தல், வாங்கியதை இல்லையெனல், பொய்க் கணக்குக் காட்டுதல் முதலிய புன் செயல்களே இங்குப் பழிச் செயல்களாகக் குறிக்கப்பட்டுள்ளவை. இவை செய்வோர் பிறர் பொருளை வஞ்சகமாகக் கவர்கின்ற னரன்றோ?