பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வள்ளுவர் இல்லம்

பெண்ணுமாய்க் கலந்து, தமக்கென தனியிடங்கள் (கூடு, புதர், குகை முதலியன) தேடிக்கொண்டு, குஞ்சு-குட்டிகளை ஈன்று வாழ்க்கை நடத்துகின்றன. அங்ஙனமிருக்க, மக்களுடைய இல்லற வாழ்க்கை மட்டும் எவ்வாறு உயர்ந்ததாகும்? உண்மைதான்! உயர்ந்ததாகாதுதான்! இன்னுங் கேட்டால், மக்களுட் சிலர், அஃறிணை உயிர் களினுங் கேடாய்க் குடும்ப வாழ்க்கை நடத்துகின்றனர். இது நல்லறமாகிய இல்லறமாகாது. அஃறிணை உயிர்களின் குடும்ப வாழ்க்கையினும் வேறுபட்ட - உண்மையானஉயர்ந்த - திருத்தமான - செப்பமான இல்லறம், திருவள்ளுவரின் திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள இல்லறவியல் என்னும் பகுதியில் இருபது தலைப்புக்களின் கீழ்த் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கூறும் அந்த இல்லத்தில் (இல்லற நெறியில்) வாழ்பவர்களிடத்தே இருபது இல்லற இயல்புகளைக் காணலாம். நாமும் அந்த வள்ளுவர் இல்லம் போந்து பார்ப்போமே!